தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்.. யாராக இருந்தாலும் சரி! அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

  • சென்னை: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில், அதில் பேசிய முதல்வர் விஜய் , "தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பார்க்க மாட்டேன். யார் தவறு செய்தாலும் உடனடியாக அமைச்சர் பதவி பறிக்கப்படும். அமைச்சர்கள் யாரும் பள்ளிக்கு சென்று ரீல்ஸ் வீடியோ எடுக்கக் கூடாது" என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பேசிய முதல்வர் விஜய் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். குறிப்பாக அமைச்சர்கள் யாரும் தவறு செய்தால், அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    மக்கள் தான் எனக்கு முக்கியம்

    தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பார்க்க மாட்டேன். யார் தவறு செய்தாலும் உடனடியாக அமைச்சர் பதவி பறிக்கப்படும். தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. ஊழல் அற்ற அரசாக தவெக அரசு இருக்க வேண்டும். வெளிப்படைத் தன்மை கொண்ட அரசாக தவெக இருக்க வேண்டும். அமைச்சர்கள் பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்தல் கூடாது என விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் விஜய் பேசியதாவது:- "எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? இல்லை மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள் தான் முக்கியம் என்று சொல்வேன். இந்த 5 ஆண்டுக்கு மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்து இருக்கிறார்கள். எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக நான் வந்திருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அதையே நீங்களும் பின்பற்றுங்கள்.

    Advertisement

    மக்களுக்கு தேவையானதை அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேடைகளில் மக்களுக்கு நல்லது செய்வேன் என சொல்லிவிட்டு செல்வதறாக வரவில்லை. செய்து காட்ட வேண்டும். அமைச்சர்கள் தங்கள் வேலைகளை மட்டும் பாருங்கள். பள்ளிகளில் ரீல்ஸ் போடக்கூடாது. பள்ளிகளை கவனிக்க அதற்கென அமைச்சர் இருக்கிறார். நீங்கள் உங்கள் துறைகளை மட்டும் கவனியுங்கள். பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர்கள் திறம்பட செயல்பட வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள்" என்று விஜய் பேசியிருக்கிறார்.

    விஜய் நேரடி எச்சரிக்கை

    தவெக ஆட்சி அமைந்து 2 மாதங்களை கடந்துள்ள நிலையில், சில அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கி வருகின்றன. குறிப்பாக, பழனி கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    அதுபோல சில அமைச்சர்களின் செயல்பாட்டில் விஜய் அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் கூறப்படும் நிலையில்தான் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் எச்சரித்து இருப்பது அமைச்சர்கள் தவறு செய்தால் எந்த தயக்கமும் இன்றி நீக்க்விடுவேன் என்று கூறியிருப்பதும், அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டு இருக்கும் நேரடியான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

    ரீல்ஸ் எடுக்கக் கூடாது!

    இதுமட்டுமின்றி அமைச்சர்கள் சிலர் ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் எடுப்பது, மாணவர்களுக்கு இடையூறு செய்வது ஆகியவையும் பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பெற்றோர்களையும் கோபம் அடையும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் இருப்பதாக பலரும் விமர்சனம் எழுந்த நிலையில், தேவையின்றி ரீல்ஸ் எடுக்கக் கூடாது எனவும் விஜய் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    சமீபத்தில் அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளி மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய விதம் சர்ச்சையை கிளப்பியது. மாணவி ஒருவரிடம் "வாட் இஸ் யுவர் ஃபாதர்?" என அமைச்சர் கீர்த்தனா கேட்டபோது, அவரால் பதில் அளிக்க முடியவில்லை. அருகில் இருந்த ஆசிரியையிடம், "நீங்கள் மாணவியிடம் உரையாடுங்கள் என்று கூறினார். அமைச்சர் கீர்த்தனா அப்போது பேசிய விதமும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது

    அதுபோக மேலும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் புகார்கள் எழுந்து வரும் நிலையில் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முகத்திற்கு நேராகவே எச்சரித்து இருக்கிறார்.. யாராக இருந்தாலும் சரி என்று முதல்வர் விஜய் எச்சரித்து இருப்பதன் மூலம் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் எந்தவித சலுகையும் காட்டமாட்டேன், தப்பு செய்தால் பதவி போய்விடும் என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Ministerial post: CM Vijay has stated that the ministerial post of anyone found to have committed wrongdoing will be stripped away. He made these remarks during a cabinet meeting held at the Secretariat today. He emphasized that he would make no distinction between acquaintances and others;