மக்கள் பிரச்சனையே இல்லையா? இடைத்தேர்தல் தொகுதிகளில் ’டேரா’ போட்ட அமைச்சர்கள்! ஸ்தம்பித்த நிர்வாகம்!

  • சென்னை: தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தாராபுரம் தொகுதியில் இன்று முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக பெரும்பான்மையான அமைச்சர்கள் அங்கே முகாமிட்டு இருக்கின்றனர். பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக போராட்டம், மேகமலை நில மீட்பு போராட்டம், டெல்டாவில் விவசாயிகள் போராட்டம் என தமிழ்நாடு கொந்தளிக்கும் நிலையில் அமைச்சர்கள் இடைத்தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், இதனால் ஆட்சி பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது. 2026 தமிழக சபை தேர்தலுக்குப் பிறகு விஜய் அரசின் ஆட்சியை 'எடை' போடும் மதுராந்தகம். தாராபுரம் இடைத்தேர்தல் தமிழக முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மதுராந்தகம் மரகதம் குமரவேலும், தாராபுரம் சத்யபாமாவும் மீண்டும் போட்டியிடுகின்றனர். திமுக தரப்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.

    இடைத்தேர்தல்

    அதிமுக தரப்பில் கணிதா சம்பத், பானுமதி களமிறங்குகின்றனர். பிரதான மூன்று கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கும் நிலையில் நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என பலரும் களத்தில் இறக்கின்றனர்.

    சத்யபாமா

    இருந்தபோதும் திமுக - தவெக - அதிமுக ஆகிய மூன்று கட்சிகள் இடையே தான் போட்டி. மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் தாராபுரத்தில் நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது. குறிப்பாக சத்யபாமா பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவரை விரட்டி அடித்து வருவது தமிழக வெற்றிக் கழகத்தினரை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. இதை அடுத்து அந்த தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    தாராபுரம் இடைத்தேர்தல்

    இது ஒரு புறம் இருக்க தாராபுரத்தில் நிலைமை மோசமாக இருப்பதை மோப்பம் பிடித்த உளவுத்துறை விஜய் அரசுக்கு ஒரு அறிக்கை அளித்துள்ளது. இதனால் அந்த தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்த அமைச்சர் பட்டாளமே ஒட்டுமொத்தமாக தாராபுரத்தில் முகாமிட்டுள்ளது. குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன், ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட சீனிர்களும், வினோத், ரமேஷ், பர்வேஸ் உள்ளிட்ட ஜூனியர் அமைச்சர்களும் களத்தில் இருக்கின்றனர்.

    ஆட்சிக்கு எதிரான மனநிலை

    அது மட்டுமல்லாமல் பல்வேறு வாரிய தலைவர்கள், ஆணையத்தின் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் என ஒட்டுமொத்த கட்சியின் கவனமும் தாராபுரத்தில் தான் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர் அப்பகுதி மீனவர்கள்.

    Advertisement

    மக்கள் போராட்டம்

    அதுமட்டுமல்லாமல் மேகமலை நில மீட்பு விவகாரம், தொடர்பாக 5வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்டா பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இப்படியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை தங்கள் வாழ்வுரிமைக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தாராபுரத்தில் குவிந்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் மதுராந்தகத்தில் இருக்கின்றனர். இப்படி மக்கள் பிரச்சனையை கவனிப்பதை விட்டுவிட்டு இடைத்தேர்தல் பணிகள் தான் முக்கியம் என அமைச்சர்கள் களமிறங்கி இருப்பதால் ஆட்சிப் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் அளித்துள்ளது.

    English Summary

    Ministers focus on Dharapuram and Madurantakam bypolls as fishermen, farmers and Meghamalai residents continue protests across Tamil Nadu.