7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான்

  • சென்னை: தமிழ்நாட்டில் இப்போது தவெக தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், திமுக தொடர்ச்சியாகக் காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திமுக தரப்பில் இருந்து தவெகவை சாடி 7 பாயிண்டுள் வந்துள்ளன. அவை அனைத்துமே தவெக அரசு பலவீனமாக இருக்கிறது.. எப்போது வேண்டும் என்றாலும் வீழும் என்பதையே குறிப்பிடுவதாக இருக்கிறது.

    Advertisement

    2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் எதிர்பாராத பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், தமிழக அரசியலில் நிலவி வந்த கூட்டணி கணக்குகளும் அடியோடு மாறிவிட்டது. இந்த மாற்றம், இதுவரை நிலவி வந்த திராவிட இயக்க அரசியலின் இருமுனைப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு புதிய அரசியல் பரிமாணத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

    Advertisement

    ஸ்டாலின்

    மேலும், இந்தத் தேர்தல் முடிவுகள், அரசியல் கட்சிகளுக்கிடையிலான விசுவாசம் மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளில் விரிசல்களை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் திமுக உடனான நீண்ட காலக் கூட்டணியைக் கைவிட்டு, தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இந்த அரசியல் நகர்வைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், தவெக அரசின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். தவெக அரசு எந்த அளவுக்குப் பலவீனமான அடித்தளத்தில் உள்ளது என்பதைத் தனது விமர்சனங்கள் மூலம் அவர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார். தவெகவை விமர்சித்து ஸ்டாலின் கடந்த ஒரு வாரத்தில் ஏழு அழுத்தமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

    Advertisement

    7 விமர்சனங்கள்

    1. தவெக அரசு தனது சொந்தப் பெரும்பான்மை பலத்தில் நிற்கவில்லை. பிற கட்சிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட கூட்டணி அரசாகவே இது செயல்படுகிறது. ஒவ்வொரு கொள்கை முடிவிற்கும் கூட்டணிக் கட்சிகளின் தயவை நாட வேண்டியிருப்பதால், இது ஒரு வலுவான அரசாகச் செயல்பட முடியாது; நிர்வாக ரீதியிலான தேக்கநிலையே மிஞ்சும் என்று விமர்சித்தார்.

    2. குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்ப்பதையே திமுக தனது முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தது. திராவிட அரசியலுக்குப் புறம்பான பாஜக போன்ற சக்திகள், தவெகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஊடுருவி, ஜனநாயகத்தைக் குலைக்கக் கூடும் என்ற அச்சத்திலேயே திமுக இந்தப் பொறுமையைக் கடைப்பிடித்தது. இதன் காரணமாகவே திமுக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.

    Advertisement

    கடும் தாக்கு

    3. தவெக ஆட்சி அமைந்தவுடன் சில காலம் அமைதியாகக் காத்திருக்கப் போவதாக திமுக அறிவித்திருந்த சூழலில், அந்தக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. திமுக தனது அரசியல் போக்கை முற்றிலுமாக மாற்றியுள்ளது. இனி தவெக அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடும் நேரடி அரசியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமடையும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    4. தவெக அரசு மிகக் குறுகிய காலமே நீடிக்கும் என்பது திமுகவின் கணிப்பாக உள்ளது. இந்த ஆட்சி எந்த நேரத்திலும் வீழக்கூடிய தற்காலிகமான ஒன்று என்று ஸ்டாலின், இந்த அரசு 5 ஆண்டுகள் தாங்காது என்றும் எனவே தொண்டர்கள் தேர்தலை எதிர்கொள்ள ரெடியாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Advertisement

    5. தவெகவின் வெற்றியை வெறும் 'சினிமா சுனாமி' என்று ஸ்டாலின் சாடியுள்ளார். நடிகருக்கான வெறித்தனமான ரசிகர் கூட்டமும், மக்களின் அரசியல் ஆதரவும் ஒன்றல்ல. தற்காலிகமான இந்த அலை அடங்கியதும், திமுக உருவாக்கியுள்ள வலுவான கொள்கை அடித்தளம் மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத தவெக அரசு வீழும் என்றும் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அவர் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

    நம்பிக்கை துரோகம்

    6. காங்கிரஸ் கட்சி செய்திருப்பது அரசியல் நம்பிக்கைத் துரோகம் என திமுக விமர்சித்துள்ளது. திமுகவின் உழைப்பில் வளர்ந்து, பலனடைந்த காங்கிரஸ், இப்போது விஜய் பக்கம் சென்றிருப்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சம் என்று சாடியுள்ளது. கொள்கை ரீதியாகத் திமுகவை ஆதரிக்க வேண்டியவர்கள், சுயநலத்திற்காகச் செயல்படும் 'ஒட்டுண்ணிகள்' என திமுக மிக கடுமையாக விமர்சித்துள்ளது.

    Advertisement

    7. தற்போதைய ஆட்சி குதிரை பேரத்தின் மூலமே நீடிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். தவெக அரசு, அதிமுக எம்.எல்.ஏக்களைத் தன் பக்கம் இழுப்பதன் மூலம் தனது பெரும்பான்மையை நிலைநாட்ட முயல்கிறது. இது ஜனநாயக மாண்புகளுக்கு விரோதமான செயல் என்றும், மக்களின் வாக்குகளை அவமதிக்கும் செயல் என்றும் ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

    English Summary

    DMK Chief MK Stalin launched a multi-pronged attack on the ruling TVK government, calling it an unstable coalition(விஜய் அரசை மிக கடுமையாக சாடிய ஸ்டாலின்): MK Stalin attacks Vijay latest news in tamil.