சென்னை: நாகையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party எனவும், மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள் என திமுக தலைவும் முன்னாள் முதலமைச்சர்மான முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாபலன். இவர் நாகை மாவட்ட தவெக மாவட்ட செயற்க்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் நேற்று என்சிபி போலிசார் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான மெத்தபட்டன் கடத்தியதாக புகார் எழுந்த நிலையில், டெல்லியில் இருந்து வந்த 5 பேர் கொண்ட என்சிபி போலிசார் 2 மணி நேரமாக சோதனை செய்தனர். அவரது வீடு மற்றும் அவரது நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடைப்பெற்ற நிலையில், சிந்தாமணி கிராமத்தில் தவெக நிர்வாகி பூபாலன், பிராதமராமபுரம் பகுதியில் சுகன் ஆகியோரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சுகன் இல்லத்தில் 100 கிலோ வரைக்கும் மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே தகவல் தெரிந்த தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் பூபாலனை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்துள்ளார். இந்நிலையில், ந்நிலையில், TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party எனவும், மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என திமுக தலைவும் முன்னாள் முதலமைச்சர்மான முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்." என கூறியுள்ளார்.மெத்தபெட்டமைன்
முக ஸ்டாலின்
த.வெ.க. நிர்வாகி
போதை 'ஒளிப்பு'
போதை மாபியா
Breaking Bad Party