வறட்சிக்கு பதில் புகழ்ச்சி! விஜய்யை உச்சி குளிர வைத்த வேளாண் பட்ஜெட்! ஸ்டாலின் கண்டனம்

  • சென்னை: வறட்சி பற்றி பேசாமல் புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சி குளிர பாராட்டு மழை பொழிந்ததுதான் இந்த வேளாண் பட்ஜெட் என தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026.

    Advertisement

    மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.

    #DravidianModel அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

    குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

    உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்! இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    அது போல் நேற்று தாக்கலான தமிழக பட்ஜெட் குறித்து அவர் கூறியிருப்பதாவது: இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,

    'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, 'Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!

    அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!

    மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
    விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!

    Advertisement

    அதுமட்டுமல்ல,
    - ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
    - வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
    - ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
    - முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!

    மொத்தத்தில்,
    சொந்தமாகவும் யோசிக்காத -
    சொன்னதையும் செய்யாத -
    சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் 'ரீல் அரசின்' முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அது போல் இந்த வேளாண் பட்ஜெட்டில் முழு பயிர்க்கடன் தள்ளுபடி, நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஆதார விலை உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் குடிமராமத்து , தடுப்பணை திட்டங்களுக்கு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil nadu Ex CM MK Stalin criticises Agri budget Is waste and it forgets about drought and praises CM was their main motto.