துப்பாக்கி ஹீரோ என நம்பி வாக்களித்த மக்களே, துப்பில்லாத ஹீரோ என சொல்கிறார்கள்.. ஸ்டாலின் விமர்சனம்

  • சென்னை: கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளதாகவும், துப்பாக்கி ஹீரோ என திரைப்படத்தை நம்பி வாக்களித்த மக்களே, தற்போது உங்களை 'துப்பில்லாத ஹீரோ' என பேச தொடங்கிவிட்டனர் என்றும் மு.க ஸ்டாலின் முதல்வர் விஜய்யை விமர்சித்துள்ளார்.

    மேலும், 6 மாத தவெக ஆட்சியில் உருப்படியாக ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை கூறிய ஸ்டாலின், கோட் சூட், பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டுமே முதல்வரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து விஜய் எப்போது விடுபடுவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்தே குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் கூட செஞ்சி சிறுமி காணாமல் போனது, தூத்துக்குடி விளாத்திகுளம் சம்பவம் என தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தவெக அரசு இதற்கு தீர்வு காணாமல் இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    கொத்து கொத்தாக கொலைகள் நடக்குது.. லண்டன் போறார் சிஎம்! தவெகவை தோற்கடிங்க.. ஸ்டாலின் வீடியோ

    இது குறித்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?.. 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?

    ராமனின் பாதுகை அயோத்தியை ஆண்டது போல்! ஸ்டாலினின் செருப்புதான் தமிழகத்தை ஆள்கிறது! லியோனி சர்ச்சை

    முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.." என்று கூறியுள்ளார்.

    English Summary

    MK Stalin has criticized Chief Minister Vijay, stating that the public is gripped by fear due to a surge in murders, robberies, sexual assaults, and the disappearance of children. He remarked that the very people who voted for him—believing in his image as a 'Thuppakki hero' —are now referring to him as a 'thuppilladha hero'.