ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. கடைசி நேரத்தில் முப்பெரும் விழா ஒத்திவைப்பு! துரைமுருகன் பேட்டி

  • சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் இன்று நடக்கவிருந்த முப்பெரும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதனால் முப்பெரும் விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

    Advertisement

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக தரப்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகிய 3 நாட்களையும் இணைந்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும்.

    Advertisement

    திமுகவின் முப்பெரும் விழாவின் போது பல்வேறு விருதுகளும் அளிக்கப்படும். அதன்படி திமுக மாநிலங்ளவை குழு தலைவர் திருச்சி சிவாவுக்கு கலைஞர் விருதும், திமுக மருத்துவ அணி செயலாளர் கனிமொழி என்.வி.ம்.சோமுவுக்கு பாவேந்திர விருதும், திமுக இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜாவுக்கு மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதேபோல் திமுக விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கு பெரியார் விருதும், சேலம் மத்திய மாவட்ட திமுக அவைத் தலைவர் சுபாஷுக்கு அண்ணா விருதும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கு பேராசிரியர் விருதும், முரசொலி அறக்கட்டளை சார்பாக வழங்கப்படும் முரசொலி செல்வம் விருது பத்திரிகையாளர் திருமாவேலனுக்கு வழங்கப்பட இருந்தது.

    Advertisement

    இப்படியான சூழல் இன்று மாலை நடக்கவிருந்த திமுக முப்பெரும் விழா திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், முப்பெரும் விழா ஒத்தி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

    இதனால் முப்பெரும் விழா நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அண்ணா பிறந்தநாள் விழாவிலும் கூட ஸ்டாலின் பங்கேற்கவில்லை. திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டாலின் உடல்நலம் பெற்ற பின், முப்பெரும் விழா நடக்கும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    MK Stalin: DMK Mupperum Vizha Postponed Due to MK Stalin Ill Health; Revised Date to Be Announced Later