ஓடி வந்த ஸ்டாலின்.. நீட் தேர்வும் ரத்தாகும்.. உறுதி செய்வோம்.. ஆரவார பதிவு

  • சென்னை: "அன்று விவசாயிகள் போராடி வென்றது போல, இன்று நாடு முழுவதும் இணையத்திலும் களத்திலும் போராடி வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எவ்வாறு திரும்பப் பெறப்பட்டதோ, நீட் தேர்வும் நிச்சயமாக ரத்து செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.

    Advertisement

    போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய அரசு சார்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினர். சிஜேபி சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர்.

    நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் எனும் மூன்று கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சிஜேபி பிரதிநிதிகள் மத்திய அமைச்சர்களிடம் அளித்தனர்.

    Advertisement

    இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

    சிஜேபி நடத்திய போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளதை நாடு முழுவதும் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, நீட் தேர்வு முறைகேடுகள் இனி களையப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்ட வெற்றிக்கு பல்வேறு தரப்பிலினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய விவசாயிகள் இதை முதலில் செய்து காட்டினார்கள். இன்று இளைஞர்கள் அதைச் செய்துள்ளனர். நாடு முழுவதும் இணையம் மற்றும் நேரடிப் போராட்டங்கள் மூலம் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது போலவே, நீட் தேர்வையும் ரத்து செய்வதை நாம் உறுதி செய்வோம்.

    பொய்யான பரப்புரைகளாலும், வெற்று வாக்குறுதிகளாலும் இளைஞர்களைத் திசை திருப்பலாம் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைக்கத் தீர்மானித்திருக்கும் தலைமுறையின் தெளிவையும், துணிவையும், உணர்வையும் அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

    Advertisement

    கேள்வி கேட்கவும், அரசியலில் பங்கேற்கவும், அநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கவும் இந்த எழுச்சி ஒரு தலைமுறைக்கு ஊக்கமளிக்கட்டும். விழிப்புணர்வும் அஞ்சாமையும் கொண்ட இளைஞர்களே எந்த ஜனநாயகத்துக்கு வலிமையான அடித்தளம்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    "Just as the farm laws were repealed, we shall ensure that NEET is also abolished." says MK Stalin about CJP Protest.