உதய் கைதானபோது, போலீஸ் அடித்ததில் காயமான 2 பேர் எப்படியிருக்காங்க? எம்எல்ஏவிடம் விசாரித்த ஸ்டாலின்

  • சென்னை: சென்னை நீலாங்கரையில் போலீஸார் தாக்கியதில் காயமடைந்த இருவரிடமும் செல்போனில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    Advertisement

    சென்னை ஈசிஆர் சாலை நீலாங்கரை பகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.

    Advertisement

    அவரது கைதை தடுக்க உதயநிதியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தின் முன்பு படுத்துக் கொண்டனர். இதையடுத்து போலீஸார் ஒவ்வொருவரையாக விலக்கிவிட்டனர். அப்போது போலீஸார் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    போலீஸ் அராஜகம் ஒழிக, காவல் துறை அடக்குமுறை ஒழிக என கூச்சலிட்டனர். இந்த நிலையில் அங்கிருந்த போலீஸார் திமுக நிர்வாகிகளை தாக்கிய போது இருவருக்கு ரத்தம் சொட்டியது.

    உடனே அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், சோழிங்கநல்லூர் முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷின் செல்போனுக்கு அழைத்து பாதிக்கப்பட்டவர்கள் குறித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு நல்லதொரு சிகிச்சையை கொடுக்க சொல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    நடந்தது என்ன?

    தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டர்கள் திரிஷாவின் பெயரை சொல்ல அதற்கு உதயநிதி இரட்டை அர்த்தத்தில் ஒரு வார்த்தையை கூறி சர்ச்சையில் சிக்கினார்.

    இதை கண்டித்து தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கெல்லாம் உதயநிதியின் வீட்டில் போலீஸார் குவிந்தனர். அப்போது 9 பிரிவுகளின் கீழ் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவரை கைது செய்ய வந்திருக்கிறோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

    இந்த தகவலறிந்த முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோர் நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்களும் போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Advertisement

    ஆனால் போலீஸாரோ காலை 7 மணிக்கே வந்துவிட்டோம். ஆனாலும் உதயநிதியை வெளியே அனுப்பவில்லை. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது என கேட்டனர். அதற்கு கிருத்திகா, "அவர் குளித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் பொறுமையா இருங்க" என்றார்.

    பின்னர் மா.சுப்பிரமணியனும் அவர் காலை கடனை முடிக்க வேண்டாமா, தஞ்சாவூருக்கு அழைத்து செல்வதாக சொல்கிறீர்கள். இங்கிருந்து 7 மணி நேரம் ஆகும். அது வரை அவர் காலை கடனை கழிக்காமல் அழைத்துச் செல்வது மனித உரிமை மீறல் என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதையடுத்து வழக்கறிஞர்கள் சரவணன், பரந்தாமன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் உதயநிதி வீட்டிற்கு வருகை தந்து அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். உதயநிதியை கைது செய்ய மதியம் 12 மணி வரை தடை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றனர். ஆனால் அதை போலீஸார் கேட்கவில்லை, அது போல் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்றனர்.

    Advertisement

    பிறகு உதயநிதியை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலாங்கரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். அப்போதுதான் நிர்வாகிகள் சிலரது மூக்கு உடைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Ex CM MK Stalin inquires about health condition of dmk cadres who got injured in Udhayanidhi arrest.