மு.க. ஸ்டாலின் கொளத்தூர் கேஸில் நல்ல தீர்ப்பை தர மாட்டாங்க.. தவெக பாயாசமா? பாஜக ப்ராக்ஸியா: பொன்ராஜ்

  • சென்னை: கொளத்தூர் தோல்விக்கு எதிராக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.. ஸ்டாலின் மட்டுமல்ல, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றதுமே, EVM மீது சந்தேகம் இருக்கிறது என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே, திமுக தோற்றதால் இப்போது வழக்கு போடுகிறார்கள் என்பது தவறானது. ஆனால் இந்த வழக்கில் சாதகமான முடிவுகள் வருவதற்கு தேர்தல் ஆணையம் விடாது" என்று அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Marshal Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள பொன்ராஜ், "முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கொளத்தூர் தோல்விக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். 100% விபத்துகளையும், EVM மற்றும் VVPAT முடிவுகளையும் எண்ணிச் சரிபார்த்து அறிவிக்க வேண்டும் என்ற இந்த வழக்கு இப்போதுதான் சரியாகத் தொடங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இருந்தாலும் இந்த கோரிக்கையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதால் இது ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமே. இதற்காகத்தான் "இந்திய மக்கள் வாக்குரிமை மீட்பு இயக்கம்" அனைத்துக் கட்சிகளையும் இணைத்து போராடுவதற்காக உருவாக்கியுள்ளோம்.

    டிரம்ப் இதை ஒப்புக் கொள்வாரா

    இந்த வழக்கு எந்த அளவிற்கு சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிக்கப்படும்.. அப்போதுதான் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் யாருக்கு சாதகமாக உள்ளன என்பது புலப்படும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் தேர்தல் அமைப்பைப் பாராட்டியிருக்கிறார்.. நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தியாவின் EVM தேர்தல் முறையை ட்ரம்ப் பாராட்டுவாரேயானால், அமெரிக்காவிலும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று மோடி பரிந்துரைக்க வேண்டும். அமெரிக்காவில் இவிஎம் மூலம் தேர்தல் நடத்த ட்ரம்ப் ஒப்புக்கொள்வாரா?

    Advertisement

    மக்களின் சொத்துக்கள்

    மோடி ஏன் இதை பாராட்டுகிறார் என்றால், இவிஎம் இருந்தால் மட்டுமே கார்ப்பரேட்டுக்கான அரசாகத் தொடர முடியும். கல்வி, மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை உருவாக்கி, வெளிநாட்டு பன்னாட்டு கம்பெனிகள் மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்க வேண்டும் என்றால் இவிஎம் இருந்தாக வேண்டும். இதை வைத்துதான் மோடி 3 முறை பிரதமராகியுள்ளார்.. தமிழகத்தில் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சிகளை மாற்றியுள்ளனர்.

    இதை மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் நாம் ஜென்மத்திற்கும் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் ஆய்வு செய்ய சொன்னாலும், 45 நாட்களுக்கு மேல் VVPAT சீட்டுகளில் எந்த சின்னமும் பதிவாகி இருக்காது, எல்லாம் அழிந்திருக்கும்.

    Advertisement

    சாதகமான முடிவு ஸ்டாலினுக்கு வருமா

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், சோர்ஸ் கோட் (Source Code), சிம்பல் லோடிங் சிஸ்டம் மற்றும் கவுண்டிங் சாப்ட்வேர் அல்காரிதம் போன்றவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக காட்ட வேண்டும். தேர்தல் ஆணையமும், BHEL மற்றும் ECIL நிறுவனங்களும்தான் இதைச் செய்ய முடியும். ஆனால் அவர்கள் அதை செய்து காட்ட மாட்டார்கள்.

    மு.க. ஸ்டாலின் மட்டுமல்ல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் வெற்றி பெற்ற உடனேயே EVM மீது சந்தேகம் இருக்கிறது என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே, திமுக தோற்றதால் இப்போது வழக்குத் போடுகிறார்கள் என்பது தவறானது. இந்த வழக்கில் சாதகமான முடிவுகள் வருவதற்கு தேர்தல் ஆணையம் விடாது; ஏனெனில் 45 நாட்களுக்கு மேல் பிரிண்ட் அவுட்கள் அழிந்துவிடும்.

    Advertisement

    கார்ப்பரேட்டுகளின் அடிமையாக மாறிவிடும்

    தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இது குறித்து உறுதியான குரல் கொடுக்கவில்லை. ராகுல் காந்தி இருக்கும் வரை காங்கிரஸுக்கு விமோசனம் கிடையாது.

    தவெகவை பாஜகவின் கொள்கை எதிரி என்றெல்லாம் சொல்லாதீர்கள்.. இதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கான பாயாசம் அது. பாசத்தை உள்ளே கொண்டு வருவதற்கான பாயாசம் அது. அந்த பாயாசத்தை எல்லாம் நம்புறதுக்கு வேற வேற ஆள் இருப்பாங்க... ஆனால் தவெக பாஜகவின் ப்ராக்ஸி கவர்மெண்ட்... பிராக்சி கட்சிதான் தவெக.

    இவிஎம்-ஐ ஒழிக்காவிட்டால் இந்தியா அமெரிக்காவின் அடிமையாக, கார்ப்பரேட்டுகளின் அடிமையாக மாறிவிடும். தண்ணீர் கூட கிடைக்காது, கல்வியும் மருத்துவமும் எட்டாக்கனியாகிவிடும்.

    Advertisement

    தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 20,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்குவோருக்கு 3 சிலிண்டர் இலவசம் என்றும், நகர்ப்புற எக்ஸ்பிரஸ் பஸ்களில் இலவச பயணம் என்றும் அறிவித்துள்ளார். ஆனால், அனைத்து குடும்பங்களுக்கும் 6 சிலிண்டர் இலவசம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இரண்டரை லட்சம் வருமான வரம்பு வைப்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை. நகர்ப்புற பேருந்துகளில் மட்டும் இலவச பயணம் என்று சுருக்குவதும் அரைகுறை திட்டமே ஆகும்.

    ஒன்லி பாயாசம்

    தேர்தல் வாக்குறுதி அளிக்கும்போது நிதிநிலைமை, பட்ஜெட் மற்றும் கடன் விவரங்கள் பற்றித் தெரியாமல் வாக்குறுதி கொடுத்தாரா? ஒரு நம்பரை ஒழுங்காக கூட்டிக் படிக்கத் தெரியாதவர்களை வைத்து ஆட்சி நடத்துவது தமிழ்நாட்டிற்குத்தான் கேவலம். சொன்ன திட்டங்கள் எதையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறைத் திட்டங்களையும் பாயாசத்தையும் கொடுத்துவிட்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    MK Stalin Kolathur Case Verdict.. Will TVK Be BJP’s Proxy? Ponraj Calls TVK “Payasam” and Raises Questions