மு.க ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. திமுக எம்எல்ஏ திருமண விழாவில் பரஸ்பரம் நலம் விசாரிப்பு

  • சென்னை: ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருக்கக் கூடிய மனோஜ் பாண்டியன் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதே நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனும் பங்கேற்ற நிலையில் இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர்.

    Advertisement

    ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏவான மனோஜ் பாண்டியன் இல்ல திருமணவிழா சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார்.

    Advertisement

    ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு

    முன்னதாக இதே திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்று இருந்தார். நயினார் நாகேந்திரனும் மு.க ஸ்டாலினும் எதிரெதிரே வந்த நிலையில் பரஸ்பரம் இருவரும் கைகளை குலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    அரசியலில் எதிரும் புதிருமாக மு.க ஸ்டாலினும், நயினார் நாகேந்திரனும் பயணித்தாலும் இருவரும் நேரில் சந்தித்திக்கொண்ட போது எந்த வித தயக்கமும் இன்றி நட்பு பாராட்டி பேசியது அரசியல் நாகரீகத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. திமுக தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை அரசியலில் என்னதான் நேர் எதிரியாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில், அரசியல் தலைவர்கள் மீது மிகுந்த கனிவை காட்டுவதை பார்க்க முடியும்.

    Advertisement

    ஸ்டாலின் சீமான் சந்திப்பு

    கடந்த ஜூன் மாதம் புதுவையில் இயக்குநர் கவுதமன் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நேரில் சென்று மணமக்களை வாழ்த்திய மு.க ஸ்டாலின் அப்போது அதே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமானை பரஸ்பரம் சந்தித்து நலம் விசாரித்து சிறிது நேரம் பேசினார். திமுக மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும் நேரில் பரஸ்பரம் இரு தலைவர்களும் நலம் விசாரித்தது அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தியிருந்தது.

    மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ

    ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் கடந்த முறை அதிமுக சார்பாக போட்டியிட்டு ஆலங்குளம் எம்.எல்.ஏவாக இருந்தார். அதிமுகவில் உள்கட்சி குழப்பம் ஏற்பட்ட போது ஓ பன்னீர் செல்வம் தலைமையை ஏற்று அவரது அணியில் முக்கிய தலைவராக இருந்தார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஓபிஎஸ் அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது அவரது ஆதரவாளகள் அடுத்தடுத்து வெளியேறினர்.

    Advertisement

    ஓ பன்னீர் செல்வமே திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், மனோஜ் பாண்டியன் அவருக்கு முன்பாகவே திமுவில் இணைந்தார். ஆலங்குளம் தொகுதியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் 69,170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வந்தது. அதிமுக சார்பாக போட்டியிட்ட கே ஆர்பி பிரபாகரன் 61,372 வாக்குகளும், தவெக சார்பாக போட்டியிட்ட விபின் சக்கரவர்த்தி 60,684 வாக்குகளும் பெற்றனர்.

    English Summary

    Former CM and DMK President MK Stalin attended a wedding ceremony at the residence of Manoj Pandian, the DMK MLA for the Alangulam constituency, and congratulated the newlyweds. Nainar Nagendran also attended the same event, and the two exchanged pleasantries.