பொதுவாழ்வின் எடுத்துக்காட்டு..எம்ஜிஆர் ஆட்சிக்கு சிம்மசொப்பனம் துரைமுருகன்! புகழ்ந்த முக ஸ்டாலின்!

  • சென்னை: எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு சிம்மசொப்பனம் துரைமுருகன் எனவும், சட்டமன்றத்தில் துரைமுருகனை எதிர்த்து பேசுவது என்பது அப்போது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது, அந்த ஆட்சிக்கு திமுக சார்பில் கா.சுப்பு, ரகுமான் கான், அண்ணன் துரைமுருகன் ஆகிய 3 பேர் சட்டமன்றத்தில் சிம்மசொப்பனமாக விளங்கினர். இதனால் இவர்கள் சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்று எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்தார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Advertisement

    முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன்- சாந்தகுமாரி தம்பதியில் பேத்தியும், கதிர் ஆனந்த் எம்பி - சங்கீதா தம்பதியின் மகளுமான செந்தாமரை -தீபக் ரவி ஆகியோரின் திருமண விழா இன்று நடைபெற்றது.

    Advertisement

    இதில் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின்," 1965-ஆம் ஆண்டு இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தளபதியாக உருவெடுத்தவர் துரைமுருகன். பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அண்ணன் துரைமுருகன்! திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து எம்ஜிஆர் பிரிந்தபோது தனிக் கட்சி தொடங்கிய போது துரைமுருகனை, கட்சியில் சேர எம்ஜிஆர் அழைத்திருக்கிறார்.

    ஆனால் எம்ஜிஆரிடம், கலைஞரோடுதான் இருப்பேன் என்று சொல்லி இன்று வரையில் கலைஞர் உருவாக்கிய கலைஞர் வளர்த்து இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தில் தான் இன்றைக்கும் பொதுச்செயலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    எத்தனையோ அரசியல் தலைவர்களை பார்த்தவர் அண்ணன் துரைமுருகன், எத்தனையோ அரசியல் தலைவர்களை பழகியவர் அண்ணன் துரைமுருகன். எத்தனையோ தேர்தல் களத்திலும் ஈடுபட்டவர் அண்ணன் துரைமுருகன், அப்படி ஈடுபட்டதில் எத்தனையோ தோல்விகளை, வெற்றிகளை சந்தித்தவர். எத்தனையோ சட்டமன்ற விவாதங்களை பங்கேற்று அழுத்தமாக ஆணித்தரமாக உரையாற்றி இருக்கக்கூடியவர்.

    எதிராளிகள் கூட வியர்க்க வைக்கக்கூடிய வகையில் பேச்சாற்றல் அவருக்கு உண்டு. சிறந்த நிர்வாகியாகவும் உணர்ச்சியோடு பேசக்கூடியவராக மட்டுமல்ல நகைச்சுவை கலந்தும் பேசுவார். சட்டமன்றத்தை பொறுத்தவரைக்கும் இவரை எதிர்த்து பேசுவது என்பது பெரிய விஷயமாக இருந்தது. அந்த அளவுக்கு சட்டமன்றத்தில் அவருடைய அழுத்தத்தை எடுத்து சொல்லக் கூடியவர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் எம்ஜிருடைய ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த போது, அந்த ஆட்சிக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் துரைமுருகன் கா. சுப்பு, ரகுமான் கான் ஆகிய மூன்று பேர் தான் சிம்ம சொப்பனமாக சட்டமன்றத்தில் விளங்கினார்கள். அந்த காரணத்தால் எம்ஜிஆர், அவர் மீது நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்று தண்டனை கொடுத்தார். அப்போது கலைஞர், அந்த தண்டனையை கழகத்தினுடைய பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி இடி, மின்னல், மழை என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார்." என்றார்.

    English Summary

    MK Stalin praises DMK General Secretary Duraimurugan at a family wedding, recalling his role in challenging the MGR government.