நல்ல வேலை தப்பிச்சேன்.. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி! கையெடுத்து கும்பிட்ட ஸ்டாலின்

  • சென்னை: திமுக முப்பெரும் விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றி என கையெடுத்து கும்பிட்டார். சட்டசபையில் நடந்த கொடுமையெல்லாம் பார்க்காமல் இருந்ததற்கு கொளத்தூர் மக்களுக்கு நன்றி சொல்கிறேன். நல்ல வேலை, தப்பிச்சேன்.. ரீல்ஸ் வெறி பிடிச்ச ஆளும் கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம் கூட தன் மாண்பை இழந்து நிற்கிறது என்று மு.க ஸ்டாலின் பேசினார்.

    Advertisement

    ஸ்டாலின் பேசியதாவது:- "ரீல்ஸ் வெறி பிடிச்ச ஆளும் கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம் கூட தன் மாண்பை இழந்து நிற்கிறது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் எல்லாரும் பாத்துருப்பீங்க.. நல்ல வேலை. கொளத்தூர் மக்களுக்கு நன்றி சொல்கிறேன். தப்பிச்சேன்.. அந்த கொடுமையெல்லாம் பார்க்காமல் இருந்ததற்கு.. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி..

    Advertisement

    17 லட்சம் வாக்குகள் தான்

    இப்போது இந்த கூட்டத்தொடரை பார்த்து இருப்பீங்க.. நேரடியாக ஒளிபரப்பினார்கள். என்ன நடக்கிறது.. முதல்வர் சிரிப்பதை பார்க்க முடியவில்லை என்று கவலைப்பட்டு சட்டப்பேரவையில் பிக்ஸ் ஸ்கிரீன் வைக்க கோரி ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் கேட்கிறார்கள். இது தான் நாட்டுக்கு தேவையா..

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், மிசா, சர்க்காரியா கமிஷன் என சம்பந்தமில்லாமல் பேசி அவதூறு பரப்புகிறார்கள். டைவர்ஷன் பண்ணுகிறார்கள்.. என் மிசா கைதுவை இங்கு எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.. என்று ஸ்டாலின் பேசினார்.

    Advertisement

    நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பார்க்காத தோல்வியும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய கட்சிக்கும் நமக்கும் வித்தியாசம் என்ன? 17 லட்சம் வாக்குகள் தான். எதிரி யார் என்று சரியாகக் கணித்துப் பணியாற்றியிருந்தால், இந்தத் தோல்வியே ஏற்பட்டிருக்காது. உண்மையில், அவர்களின் ஆட்சி நடப்பதே நம் கூட்டணியில் வென்ற கட்சிகளின் ஆதரவோடுதான்.

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை

    ஆதரவு தந்த கட்சிகளையும் நம்பாமல், குதிரை பேரம் நடத்திக் கொண்டிருப்பதுதான் ஆளுங்கட்சியின் லட்சணம். முதல்வரை பொறுத்தவரை, தினமும் ஷூட்டிங் மூடில் தான் இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிவிட்டு யார் இயக்குனர், யார் கேமராமேன் என்று சொல்லாமல் மக்கள் முன்னாடி நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் பஞ்ச் டயலாக் இப்போது பாரின் ஷூட்டிங், எல்லாமே ரீல்ஸ்தான்.

    Advertisement

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, இப்படி ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், இவர்களால் மக்களை எல்லா நாளும் ஏமாற்ற முடியாது. முதல்வர் பாணியிலேயே சொல்ல வேண்டும் என்றால் தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு நடுவில் தான் போட்டி. ஒன்று மின்வெட்டு.. இன்னொன்று அரிவாள் வெட்டு. தமிழகத்தில் கொலை நடக்காத நாட்களே இல்லை. இன்று மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளது.

    ரீல்ஸ் வெறி பிடித்த ஆளும் கட்சி

    'ரீல்ஸ்' வெறி பிடித்த ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம்கூடத் தனது மாண்பை இழந்து இப்போது நிற்கிறது. வாக்களித்த மக்கள் வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டால், அவதூறு பரப்பி 'ரீல்ஸ்' போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கட்சிக்கு நியாயமாக தமிழக வெற்றிக் கழகம் என்று இல்லாமல், தமிழக ரீல்ஸ் கழகம் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். தவெகவின் திமிருத்தனத்திற்கும், ஆணவத்திற்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல். அதனால், மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்குத் தக்க பாடம் புகட்டத் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.

    English Summary

    MK Stalin: Speaking at the DMK’s 'Mupperum Vizha' (Grand Tripartite Festival), former Chief Minister Stalin expressed immense gratitude to the people of Kolathur with folded hands. He thanked them for sparing him from witnessing the appalling scenes that unfolded in the Legislative Assembly. "Thank goodness I escaped... Even the century-old Legislative Assembly has lost its dignity because of ruling party members obsessed with making 'Reels'," M.K. Stalin remarked.