தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை.. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

  • சென்னை: விஜய்யின் தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், "தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம்?" என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பாஜகவின் "ஜெராக்ஸ்" போல செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

    Advertisement

    தவெக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த மு.க. ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தார். "கான்பிடெண்டா இருங்க" என மக்களிடம் கூறும் முதல்வர் விஜய்க்கே தனது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்றும் அவர் விமர்சித்தார். கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் விஜய் டெல்லி சென்றாரா என்றும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், பொறுப்பான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துக்காட்டும் என கூறினார்.

    Advertisement

    விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

    சென்னையில் நடந்த திமுக மகளிரணி கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- "திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிரணியும் முக்கிய காரணம். திமுக ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்றால்.. இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். நான் பேசியதை திரித்துக்கூறி, ஆட்சியை கவிழ்க்க சதியா என்று சிலர் அழுகின்றனர். தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

    திமுக ஆட்சியில் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்து கொடுத்தோம். தவெக ஆட்சியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் கவிழ்ப்பார்கள். தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகிறார்கள். ஆளும் கட்சியை சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன.

    Advertisement

    எம்.எல்.ஏக்களை திருடுகிறார்

    அதிமுக எம்.எல்.ஏக்களை விஜய் ஷாப்பிங் செய்கிறார். விஜய் ஆட்சி மீது விஜய்க்கே நம்பிக்கை இல்லையா? தவெகவினரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கும் நிலை வந்துவிட்டது. பாஜக மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்கு விஜய் செய்கிறார். ஒரு மாதத்தில் கேலிக்கூத்தான, அசிங்கமான ஆட்சியாக தவெக மாறியுள்ளது. ஒரே மாதாத்தில் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தவெக என்ன ஆஃபர் செய்தது?

    கான்பிடண்டா இருங்க என்ற விஜய்யே நம்பிக்கையுடன் இல்லை. தீர்ந்து போன சக்தி என்று சொன்ன கட்சிகளின் எம்.எல்.ஏக்களையே திருடுகிறார் விஜய். நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், திமுக முன்வைத்த கோரிக்கைகளை விஜய் பேசியுள்ளார்.

    Advertisement

    கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா டெல்லி போனீங்க?

    பாலியல் வன்முறை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீட்டு நடக்கும் போது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? நான் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்ற போது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்க சென்றேன் என்றார் விஜய். கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவே முதல்வர் விஜய் டெல்லி சென்றாரா? பாஜகவை உறுதியாக விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என அமைதியாக இருக்கிறீர்களா?

    இது சினிமா ஆல்ல.. ஆட்சி நிர்வாகம். திமுகவின் கொள்கை விளக்க குறிப்பாகவே விஜய்யின் பேச்சு இருந்தது. பாசிசம், பாயாசம் என்று நக்கல் செய்த விஜய் தற்போது என்ன செய்துவிட்டு வந்து இருக்கிறார். மாநில உரிமை எதுவாக இருந்தாலும் திராவிட மாடல் ஆட்சி ப்ளூ பிரிண்ட் படிதான் யாரும் ஆட்சி செய்ய முடியும். தவெக ஆட்சியை நோக்கி திமுக எழுப்பும் கேள்விகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

    English Summary

    MK Stalin strongly criticised the TVK government led by Chief Minister Vijay, alleging that women are not safe under the current administration. He claimed that many people are questioning their decision to vote for TVK and accused the government of functioning like a “xerox copy” of the BJP. Stalin also said the DMK would continue to function as a responsible opposition and expose the failures of the government.