தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை.. விஜய் அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்!

  • சென்னை: "சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை! இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    சென்னை அடையாறில் நேற்று பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச் சென்ற வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரௌடி மைத்ரேயன், நிபந்தனை ஜாமீனில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுஇட்டு வந்துகொண்டிருந்தபோது, 2 பைக்குகளில் வந்த கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தலைநகரில் பட்டப் பகலில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதுபோல, தமிழ்நாட்டில் ஆங்காங்கே குற்றச் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. ரவுடிகள், எதிரிகளால் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன. மேலும், அண்மைக்காலமாக, குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்களும் தமிழ்நாட்டில் அதிகமாக நடந்து வருகின்றன.

    இதுஒருபுறம் இருக்க, சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பி ஓடிய கைதிகளில் 13 பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை! இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!" எனச் சாடியுள்ளார்.

    English Summary

    “There is no safety anywhere —be it in prisons, schools, on the roads, or in courts. Chief Minister shows no concern for any of this. There is no guidance for officials, and criminals have no fear. As long as there is a TVK administration, there will be no salvation for Tamil Nadu” remarked DMK leader MK Stalin, expressing sharp criticism.