லட்சம் பேர் செய்த தவறு.. கோடிக்கணக்கானோர் பாதிப்பு! மாற்றத்தால் வந்த ஏமாற்றம்.. முக ஸ்டாலின் தாக்கு!

  • சென்னை: லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது எனவும், வரலாறு தெரியாத இளைஞர்களால் ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு ஏமாற்றமாக மாறி இருக்கிறது என த.வெ.க ஆட்சி அமைந்ததை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

    Advertisement

    சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் அவர்களின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

    Advertisement

    இதில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி ஆர் பாலு, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ,ராசா, முன்னாள் முதலமைச்சர் ஓ,பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

    ஆ ராசா

    திருமண நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா,' சில தறுதலைகள் காருக்கு தேசிய கொடி வந்து விட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என சில தறுதலை அமைச்சர்கள் பேசி வருகின்றனர். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப்பிரவேசம் செய்த பின்பு தான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளை அடித்துக் கொண்டார்கள். அறிவாலயம் வந்த பின்பு தான் தமிழ்நாடு தனக்கு வெள்ளை அடித்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த தறுதலை கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்" என்று கூறினார்.

    Advertisement

    கவிஞர் வைரமுத்து

    பின்னர் பேசிய கவிஞர் வைரமுத்து," அண்ணன் அமிர்தம் அவர்கள் சொல்லால் அமிர்தம் செயலால் அமிர்தம் பண்பில் அமிர்தம் அமிர்தம் என்பது இடுபெயர் அல்ல காரணப்பெயர். கலைஞரை தாய் மாமனாக கருதியது இல்லை தாயாகவே கருதினார் அமிர்தம். பூம்புகார் படத்தின் ஒளிப்பதிவாளர் அமிர்தம், அவர் பார்த்த கண்களால் தான் இன்று நாம் பூம்புகாரை பார்த்தோம். தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு, என்னோடு தோல்வியில் துன்பத்தில் இருப்பவர்களை தான் நான் நேசிக்கிறேன்" என்று கலைஞர் கூறினார்.

    மு.க.ஸ்டாலின்

    தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," ஒரு டாக்டர் குடும்பத்தில் நடைபெறக் கூடிய திருமணம், டாக்டர்கள் சேர்ந்து ஒன்றாக செய்யக் கூடிய திருமணமாக இது பார்க்கப்படுகிறது. இதுபோன்று பட்டதாரிகள் அத்தி பூத்தார் போல தான் சில குடும்பத்தில் இருப்பார்கள். அரை நூற்றாண்டுக்கு முன் அத்தி பூத்தார் போல் தான் இருப்பார்கள்.

    Advertisement

    இளைஞர்கள்

    ஊருக்கு ஊர்.. கிராமத்துக்கு கிராமம்.. வீட்டுக்கு வீடு.. பட்டதாரிகள் கிராமத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் திராவிட இயக்கம் தான் காரணம் எனது மறந்து விடக் கூடாது. இந்த நிலைக்கு வருவதற்கு காரணம் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு புரியவில்லை தெரியவில்லை.

    தமிழக அரசியல்

    அதனால் தான் ஆ.ராசா சொன்னது போல், ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு ஏமாற்றமாக மாறி இருக்கிறது.
    லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது.
    இந்த நிலை மாற வேண்டும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கும் நீங்கள் வருங்காலத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்டுங்கள்." என்றார்.

    English Summary

    MK Stalin criticizes the Vijay government, saying a political change has turned into disappointment and millions are suffering from the decision.