சென்னை: கரூரில் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியான போது கூட "எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்" என கூறினேனே தவிர, உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட முயலவில்லை என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு நேற்று அந்த தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஜெம் வீரமணி வழக்கு விவகாரத்தில் வாயை தொறங்க ஸ்டாலின் சார் என்று விஜய் சரமாரியாக விமர்சித்த நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய்க்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ள ஸ்டாலின், "கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, "எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்"- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். அதனால், "முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?" என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.. உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே! நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம் என்ன என்றால், வெற்றி மின்வெட்டுத் திட்டம், பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்."ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்"- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்! இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய்யை காண காலையில் இருந்தே மக்கள் காத்துக்கிடந்தனர். விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. கூட்டநெரிசலில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படும் போது கூட அங்கு தவெகவினரின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட இல்லை. விஜய்யும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் இரவோடு இரவாக வீட்டுக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் கூட ஒரு வார்த்தை கூட பேசமால் சென்றார். திமுக நிர்வாகிகள் கூட விஜய் மீது வழக்கு பதிய கோரி கூறி வந்தாலும் அப்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின், எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார் என பேசியிருந்தார்.தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள்
புது திட்டமே கொண்டு வரல
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!டிவி, பேப்பர் பார்க்கவில்லை
கரூர் கூட்டநெரிசல்