முதல்வர் பதவி 10 to 5 ஆபீஸ் வேலை கிடையாது! விஜய்யை சாடிய ஸ்டாலின்! பட்டு வேட்டி குறித்தும் கிண்டல்

  • கோவை: "100க்கு 100 தூய சக்தி என்று சொல்பவர்களின் ஆட்சியில் நாளுக்கு நாள் துர்நாற்றம் வீசுகிறது என்று தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பதவி என்பது 10 to 5 ஆபீஸ் வேலை இல்லை என்றும் அதற்கு நாம் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்றும் சாடினார்.

    Advertisement

    கோவையில் கடந்த திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதன் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்தது. பெரியார் அறிவுலகம் திறக்கப்படும் முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து புதிதாக முதல்வர் பதவியேற்ற விஜய், இந்த பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் திறந்து வைத்தார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    Advertisement

    இதற்கிடையே பெரியார் அறிவுலகம் அமைத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் நன்றி மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், விலைவாசி உயர்வு, சிறுமிகள் மாயமாகும் விவகாரம் மற்றும் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிப்பது உள்ளிட்ட விவகாரங்களை வைத்து தவெகவை கடுமையாக சாடினார்.

    தவெக ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாக்களித்த மக்கள் தற்போது விலைவாசி உயர்வால் அவதிப்படுவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், தூய சக்தி ஆட்சியில் தினசரி துர்நாற்றம் வீசுகிறது என்று கூறி விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், "100க்கு 100 தூய சக்தி என்று சொல்பவர்களின் ஆட்சியில் நாளுக்கு நாள் துர்நாற்றம் வீசுகிறது" என்றார்.

    Advertisement

    சமீப காலமாக முதல்வர் விஜய் பொது நிகழ்ச்சிகளில் கோட் சூட்டிற்கு பதிலாக பட்டி வேட்டி அணிந்து பங்கேற்று வருகிறார். அது தொடர்பாகவும் ஸ்டாலின் கிண்டலாகப் பேசினார். ஜோதிடர் சொன்னதால் தினமும் பட்டி வேஷ்டி கட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

    முதல்வர் பதவியின் பொறுப்பு குறித்துப் பேசிய ஸ்டாலின், "முதல்வர் பதவி என்பது 10 to 5 ஆபீஸ் வேலை இல்லை. அதற்கு நாம் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்" என்றார்.

    English Summary

    DMK president MK Stalin criticised the TVK government over rising prices and other issues(கோவையில் முக ஸ்டாலின் பேச்சு): MK Stalin Coimbatore speech latest news in tamil.