விட்டு போன விசிக.. அடித்து ஆடும் தவெக! திமுக இதை கண்டிப்பா செஞ்சாகணும்.. ஸ்டாலின் எடுக்கும் முடிவு

  • சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் வெறும் 3 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். எனவே இந்த எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    திமுக கூட்டணியில் விசிக இருந்த வரை, பட்டியல் சமூக மக்களுக்கு உரிய அங்கீகாரம் என்கிற பிம்பத்தை திமுக தொடர்ந்து கொடுத்து வந்தது. இப்போது விசிக உடன் இல்லை. மறுபுறம் தவெகவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் 7 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    இப்படி இருக்கையில் மாவட்ட செயலாளர்களில் வெறும் 3 பேர் மட்டும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பது திமுகவுக்கு அமைப்பு ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். எனவே பட்டியல் சமூகத்தை சேர்ந்த மா.செக்களை 20 ஆக உயர்த்த கட்சி தலைமை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தேர்தல் தோல்விக்கு பின்னர் விரைவாக மீண்டு வருவது குறித்து திமுக தலைமை தீவிர நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. தோல்விக்கான காரணம் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் கட்சி தலைமை பெற்றிருக்கிறது. அதேபோல மக்களின் நம்பிக்கையை பெற மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கின்றன. இந்த ஆலோசனையின் அடிப்படையில்தான் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மா.செக்களின் எண்ணிக்கை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் யோசித்து வருகிறார்.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ரமேஷ், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் மட்டுமே திமுகவில் தற்போது பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்களாக இருக்கின்றனர். திமுகவை பொறுத்தவரை அமைப்பு ரீதியாக 78 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த 78ல் 3 என்பது வெறும் 3.8% சதவிகிதம்தான். ஆனால், தவெக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினருக்கான பங்களிப்பு 20%.

    இந்த விஷயத்தில் தவெக சிறப்பாக வேலை செய்து மக்களின் மதிப்பை பெற்றிருக்கிறது. எனவே, திமுகவும் ஆட்டத்தை அடித்து ஆட தொடங்கினால்தான், விஜய்யை பீட் செய்ய முடியும். அதற்காகத்தான் திமுகவின் அமைப்பு மாவட்டங்களை 117ஆக அதிகரித்து, அதில் 20 பட்டியல் சமூகத்ததினருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்க தலைமைக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக கட்சி தற்போது ரெடியாகி வருகிறது.

    Advertisement

    மு.க.ஸ்டாலின் லண்டனிலிருந்து சென்னை திரும்பிய பின்னர் இதற்கான பணிகள் வேகமெடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English Summary

    MK Stalin: Currently, only three individuals belonging to Scheduled Communities hold the position of District Secretary within the DMK. Reports indicate that party leader M.K. Stalin plans to increase this number to 20.