எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டுமா? காவல்துறை அதிகாரிகள் விளக்கம்

  • சென்னை: நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர், என்னை கைது செய்வதற்கு சபாநாயகர் அனுமதி பெற வேண்டும்.. அனுமதி இருக்கா? என்று போலீசாரிடம் திமுக விளாத்திகுளம் எம்.எல்.ஏ நேற்று ஆவேசமாக கேட்டிருந்தார். இந்த நிலையில், எம்.எல்.ஏவை கைது செய்வதற்கு சபாநாயகரிடம் முன் அனுமதி பெற வேண்டுமா? என்பது குறித்து போலீசார் விரிவாக எடுத்து கூறியுள்ளனர்.

    Advertisement

    முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நேற்று காலையில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வதற்காக விளாத்திக்குளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். கைதுக்கான வாரண்ட்டை மார்க்கண்டேயனிடம் போலீசார் கொடுத்தனர். அப்போது அவர், "சபாநாயகர் பர்மிஷன் இல்லாமல் எம்எல்ஏவை கைது செய்ய முடியாது, கட்சிக்காரங்க புரொடக்‌ஷன் போடுங்கப்பா" என தெரிவித்தார்.

    Advertisement


    விளாத்திக்குளம் எம்.எல்.ஏ கைது

    பின்னர் அவரை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். மார்க்கண்டேயனை வேனில் ஏற்றிய போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள், "போலீஸ் அராஜகம், தவெகவின் ஏவல் துறை" என கோஷமிட்டனர். பின்னர் எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மார்க்கண்டேயனிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.

    மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மார்க்கண்டேயனை 15 நாட்கள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, மார்க்கண்டேயேனை சந்திக்க அனுமதி வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், நேற்று காலையில் இருந்தே பரபரப்பான சூழலில் தூத்துக்குடி காண்பட்டது.

    Advertisement

    கைது செய்ய முடியுமா? காவல்துறை விளக்கம்

    இது ஒருபக்கம் இருக்க மார்க்கண்டேயன், தான் ஒரு எம்.எல்.ஏ ஒன்றும் தன்னை கைது செய்ய சபாநாயகர் அனுமதி வேண்டும் என்றும் கூறினர். இதனை ஏற்க மறுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். எம்.எல்.ஏவை கைது செய்ய சபாநாயகர் அனுமதி வேண்டுமா? என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது அவர்கள் கூறியதாவது: -

    "சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய சபாநாயகரிடம் எந்த வித முன் அனுமதியும் பெற வேண்டியது இல்லை. கைது செய்யப்பட்ட பிறகு அவர் எந்த வழக்கில் என்ன சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தை சபாநாயகரிடம் தாக்கல் செய்தால் போதுமானது" என்று கேட்டனர். முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசிய மார்க்கண்டேயன் மீது, குற்றவியல் சட்டப்பிரிவு 351(3) - கொலை மிரட்டல், 352 - அவதூறாக பேசுதல், 352 (2) - மக்களிடையே பகை வெறுப்புணர்வை தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    English Summary

    The police have explained in detail whether prior permission from the Speaker is required to arrest an MLA. Vilasathikulam DMK MLA Markandeyan was arrested yesterday morning for making controversial remarks about Chief Minister Vijay.