பக்தர்கள் இனி ரீல்ஸ் எடுக்க முடியாது.. 52 கோயில்களில் கொண்டு வரப்பட்ட மாற்றம்.. செல்போனுக்கு தடை!

  • சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 52 பெரிய கோயில்களில் செல்ஃபோன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பக்தர்களின் செல்ஃபோன்களை பத்திரமாக வைக்க கட்டணத்துடன் கூடிய பாதுகாப்பு பெட்டகமும் அமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலை பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் செல்ஃபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பக்தர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கோயில்களிலும் செல்ஃபோன் மூலமாக வீடியோ, செல்ஃபி எடுப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    Advertisement

    ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சோசியல் மீடியாவில் இளைஞர்கள் பலரும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றன. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு வரும் புகார்கள் அதிகரித்திருக்கின்றன. இதனால் இன்று முதல் 52 பெரிய கோயில்களுக்குள் செல்ஃபோன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் செல்ஃபோனை பாதுகாக்கும் வகையில் கட்டணத்துடன் கூடிய பாதுகாப்பு பெட்டக வசதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், திருவேற்பாடு தேவி கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், வல்லட்டக்கோட்டை சுப்பிரமணிய சாமி கோயிலில் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

    Advertisement

    அதேபோல் , காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பநாதர் கோயில், திருவள்ளூர் வீரராகவர் கோயில், திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்டவற்றிலும் செல்ஃபோன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, பழனி, சமயபுரம், ஸ்ரீரங்கம், மதுரை அழகர் கோயில்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

    பக்தர்களுக்கும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய கோயில்களில் 20 ஆயிரம் செல்ஃபோன் வகைக்கும் அளவிற்கு பாதுகாப்பு பெட்டக வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி கோயில்களுக்குள் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்கள் எடுக்கப்பட்டால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Mobile ban: Tamil Nadu Imposes Mobile Ban in 52 Major Temples to Curb Video and Reels Shooting