நாட்டையும் காக்கத் தெரியவில்லை, இளைஞர்களின் காக்கத் தெரியவில்லை.. மாணிக்கம் தாகூர்

  • சென்னை: பேப்பர் லீக் மாடலில் இருந்து தேசிய பாதுகாப்பு கசிவு வரை நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது மோடி அரசு என்றும், நாட்டையும் காக்கத் தெரியவில்லை, இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்கத் தெரியவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: நீட் / நெட் தேர்வு வினாத்தாள் கசிந்த ஆட்சியில், இப்போது DRDO-வின் 31 GB இராணுவ ரகசியத் தரவுகள் & விஞ்ஞானிகளின் கையொப்பங்கள் டார்க் வெப்பில் 8,000 டாலருக்கு விற்பனை செய்துள்ளது.

    Advertisement

    Alibi Global சுட்டிக்காட்டி உளவுத்துறையை எச்சரித்தும், பாதுகாப்பு அமைச்சகமும் மத்திய பா.ஜ.க அரசும் அலட்சியம் காட்டுவது ஏன்?. பேப்பர் லீக் மாடலில் இருந்து தேசிய பாதுகாப்பு கசிவு வரை நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது மோடி அரசு.

    நாட்டையும் காக்கத் தெரியவில்லை, இளைஞர்களின் எதிர்காலத்தையும் காக்கத் தெரியவில்லை. நாட்டின் முக்கியமான தரவுகள் கசிவது இது முதன்முறையல்ல! தொடர் சைபர் அச்சுறுத்தல்கள் இருந்தும், எந்தவொரு தீவிரமான சைபர் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளோ அல்லது நடவடிக்கைகளோ எடுக்காமல் மோடி அரசு மௌனம் காப்பது ஆபத்தானது.

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களே, நாட்டின் மிக முக்கிய இராணுவ ரகசியங்களே டார்க் வெப்பில் விற்பனைக்கு வரும் நிலைக்கு யார் பொறுப்பு? மோடி அரசின் இந்த இமாலயப் பாதுகாப்பு வீழ்ச்சிக்கு எப்போது பதில் சொல்லப் போகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu Congress leader Manickam Tagore has stated that the Modi government has jeopardized national security ranging from exam paper leaks to breaches in national security and has proven incapable of protecting either the nation or the future of its youth.