பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை.. இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி.. விஜய்யுடன் பயணம்!

  • சென்னை: சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதன்பின் போரூர் - பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலில் மோடியும், விஜய்யும் இணைந்து பயணிக்க உள்ளனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பின் பிரதமர் மோடி முதல்முறையாக சென்னை வருகிறார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து கார் மூலமாக போரூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்கிறார். இதன்பின் ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.

    Advertisement

    இதன்பின் போரூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் வரை பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் பயணம் செய்ய உள்ளனர். அப்போது மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு புறப்படும் மோடி, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்த உள்ளார்.

    தொடர்ந்து ஐஐடி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, தமிழ்நாட்டின் பல்வேறு ச்வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா இசை பயிற்சி மையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    Advertisement
    பூந்தமல்லி பைபாஸ்- வடபழனி மெட்ரோ ரயில் அட்டவணை, முழு விவரங்கள்.. பிரதமர் நாளை தரும் சர்ப்ரைஸ்

    இதன்பின் மதியம் 3 மணியளவில் ஜெய்கோபால் கரோடிய இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து சென்னை விமான நிலையம் வரும் மோடி, அங்கிருந்து டெல்லிக்கு திரும்ப உள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பயணத்தின் போது ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல் 36 கிமீ தொலைவு கொண்ட வடுகப்பட்டி - தெற்கு வெங்கநல்லூர் இடையிலான 4 வழிச்சாலையை திறந்து வைக்கிறார். அதேபோல் 30 கிமீ தொலைவு கொண்ட 4 வழி மதுரை சுற்றுச்சாலையையும் திறந்து வைக்கிறார்.

    English Summary

    Modi - Vijay: PM Modi to Inaugurate New Poonamallee-Vadapalani Metro Line in Chennai Today