பொன்னேரியில் செல்போனை பறித்து சென்ற குரங்கு.. சூப்பர் ஐடியா உடன் போனவருக்கு ட்விஸ்ட்

  • திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பிரதீஷ்துரை என்ற வியாபாரியின் வீட்டுக்குள் குரங்கு ஒன்று புகுந்தது. அங்கு பிரதீஷிடம் குரங்கு செல்போனை பறித்துச் சென்றுவிட்டது. மரத்தில் அமர்ந்து கொண்டு செல்போனை தரமறுத்த குரங்கிடம் எப்படியாவது செல்போனை வாங்க வேண்டும் என்று வியாபாரி போராடினார். இறுதியாக வாழைப்பழம் ஐடியா ஒர்க் அவுட் ஆனது. சுமார் 2 மணி நேரம் போராடி வாழைப்பழத்தை கொடுத்து தனது செல்போனை பத்திரமாக திரும்ப பெற்றார் ஆசுவாசம் அடைந்தார்.

    Advertisement

    பொதுவாக குரங்குகள் மனிதர்கள் கைகளில் உள்ள உணவுப்பொருட்களை பறித்துக் கொள்ளும். அதற்காக மனிதர்களை தாக்கக்கூட செய்யும். அதிலும் குரங்குகக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் இருந்தால், சொல்லவே வேண்டாம். அவர்களிடம் கண்டிப்பாக பறிக்க முயற்சி செய்யும். இது இயல்பானது. அதேநேரம் அண்மை காலங்களில் மனிதர்கள் கைகளில் உணவைவிடவும் அதிகமாக செல்போனை தான் கையில் வைத்து சுற்றுகிறார்கள். இதை பார்க்கும் குரங்குகள், அப்படி என்ன இதில் இருக்கு என்று ஆர்வமாகி பறிக்க தொடங்குகின்றன. அப்படித்தான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரில் குரங்கு ஒன்று செல்போனை பறித்துள்ளது.

    Advertisement

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஜார் பகுதியை சேர்ந்த 38 வயதாகும் பிரதீஷ்துரை அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் மாலை அவர் தனது வீட்டில் கட்டிலில் படுத்து கொண்டு செல்போன் பார்த்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென உள்ளே புகுந்த குரங்கு செல்போனை பறித்து சென்றுவிட்டார். இதனால் பதறிப் போன பிரதீஷ் துரை குரங்கை விரட்டி சென்றார். வேகமாக ஓடி மரத்தில் ஏறிய குரங்கு அருகில் உள்ள வீட்டு மாடியில் தாவியது மாடியில் இருந்து விரட்டிய உள்ளார். அப்போது அந்த குரங்கு கோபப்பட்டு செல்போன் கவரை கழற்றி வீசியது.

    Advertisement

    பின்னர் அருகிலுள்ள 2 வீடுகளை தாண்டி 3-வது மாடிக்கு சென்றது. குரங்கு கையில் வைத்திருந்த செல்போனுக்கு போன் செய்தபோது ரிங்டோன் சத்தம் கேட்டதும் செல்போனை கடித்துள்ளது. இதை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியது. செல்போனை எப்படி குரங்கிடம் இருந்து வாங்குவது என்று தெரியாமல் பிரதீஷ் துரை பரிதவித்து கொண்டிருந்தார்.

    2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிரதீஷ் துரை குரங்கை நோக்கி வாழைப்பழத்தை வீசினார். குரங்கும் தன்னிடம் இருந்த செல்போனை கீழே வீசிவிட்டு வாழைப்பழத்தை எடுத்து சென்றது. இதனால் பெருமூச்சு விட்ட வியாபாரி பிரதீஷ் துரை செல்போனை எடுத்து பார்த்தார். குரங்கு கடித்ததில் செல்போன் டிஸ்பிளே உடைந்துபோய் இருந்தது.

    Advertisement

    பொன்னேரி பகுதியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. கடைகள், வீடுகளில் புகுந்து பொருட்கள் தின்பண்டங்களை எடுத்து செல்கின்றன. குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

    English Summary

    Monkey snatches mobile phone in Ponneri: A twist awaits the man who tried a 'super idea' to get it back.