Mood of the Nation: தவெக கூட்டணி 28.. திமுக கூட்டணி 11.. தமிழ்நாட்டில் காங்கிரஸ்க்கு பின்னடைவு!

  • சென்னை: இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் சார்பாக எடுக்கப்பட்ட Mood of the Nation சர்வேயில் தமிழ்நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடந்தால், முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தவெக - காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களிலும், திமுக கூட்டணி 11 இடங்களிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் சார்பாக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை Mood of the Nation சர்வே மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரையிலான சர்வே எடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த பிரதமர் ரேஸில் மோடி முதலிடத்திலும், ராகுல் காந்தி 2வது இடத்திலும், விஜய் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.

    Advertisement

    அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை கடந்து விஜய் 3வது இடத்திற்கு வந்திருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களை விடவும் வடகிழக்கு மாநிலங்களில் விஜய்க்கு ஆதரவு அலை இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் Mood of the Nation சர்வேயின் தென்னிந்திய மாநிலங்களுக்கான முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

    அதன் அடிப்படையில் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் தவெக - காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களிலும், திமுக கூட்டணி 11 இடங்களிலும் வெல்லும் என்று கணக்கப்பட்டுள்ளது. அதேபோல் என்டிஏ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் நேரத்தில் இது மாறுபடலாம் என்று தெரிகிறது.

    Advertisement

    இதேபோல் ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட Mood of the Nation சர்வேயில் இந்தியா கூட்டணியில் இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும், என்டிஏ கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தவெக ஆட்சியை பிடித்துள்ளதால், கூட்டணி கணக்குகள் மாற்றம் அடைந்துள்ளதோடு, தொகுதி எண்ணிக்கையிலும் மாற்றம் வந்துள்ளது.

    திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஎம், சிபிஐ மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தவெக பக்கம் நகர்ந்துவிட்டன. இதனால் லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணியுடன் திமுக களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் திமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால் அடுத்த 6 மாதத்தில் என்ன மாற்றம் நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Mood of the Nation: TVK-Congress Ahead with 28 Seats, DMK Front Limited to 11 in Tamilnadu