மருமகளை அழைத்து சென்று ரூமில் பூட்டிய மாமியார்.. அடுத்த நொடியே கை மாறிய பணம்.. யாரந்த காம மிருகம்

  • சென்னை: பெற்ற தாய்க்கு சமமாக கருதப்படும் மாமியாரே, தன் சொந்த மருமகளுக்கு வலைவிரித்து, ஒரு கொடூர மிருகத்தின் கைகளில் பலிகடாவாக்கியுள்ளார்.. இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த மாமியார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?

    பெங்களூரு நகரின் சஞ்சய் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் பெண் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)... இவரது மாமியார், கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது திவ்யாவிடம், "வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியில் உள்ள நெடும்பறை ஹவுஸில், என்.ஜி. பிந்து என்பவரின் வீட்டில் வயதான பாட்டி ஒருவர் இருக்கிறார், அவரைப் பார்த்துக்கொள்ள பெண் தேவையாம்.. வயதானவரை பார்த்து கொள்வதால், நல்ல சம்பளம் கிடைக்கும், நீ அந்த வேலையில் சேர்ந்து விடு" என்று மருமகளுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.

    மருமகளை அழைத்து சென்ற மாமியார்

    மாமியாரின் வார்த்தையை முழுமையாக நம்பிய மருமகள் திவ்யாவோ, வேலைக்கு செல்ல சம்மதித்துள்ளார்.. உடனே மருமகளை, மானந்தவாடியில் உள்ள பிந்துவின் வீட்டிற்கு மாமியாரே நேரடியாக அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

    பிந்துவின் வீட்டில் திவ்யா தங்கியிருந்தபோது, கோழிக்கோட்டை சேர்ந்த கே.சி. மனோஜ் என்பவர் அங்கு வந்துள்ளார். திவ்யா தங்கியிருந்த ரூம் கதவை வலுக்கட்டாயமாக திறந்து கொண்டு உள்ளே புகுந்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா கத்தி கூச்சலிட்டுள்ளார்.. ஆனாலும், அந்த சத்தத்தை கேட்டும், வீட்டிலிருந்த பிந்து அதை கண்டுகொள்ளவே இல்லையாம்..

    மனோஜ் திவ்யாவை கொடூரமாக பலாத்காரமும் செய்துள்ளார்.. அதுவரை வேறு அறையில் அமைதியாக உட்கார்ந்திருந்த பிந்து.. மனோஜிடமிருந்து பெருந்தொகையை பணமாகவும் பெற்றுள்ளார்.

    மருமகளுக்கு பாலியல் தொல்லை

    இதை கண்ணால் பார்த்து அதிர்ந்து போன திவ்யா, உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல முயன்றுள்ளார்.. ஆனால், அவரைத் தடுத்து நிறுத்திய பிந்து, வெளியே போய் போலிஸிடமோ அல்லது வேறு யாரிடமோ இதைப் பற்றி வாய்திறந்தால், ரூமில் எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு குடும்ப வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாக சீரழித்து விடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்.

    அதுமட்டுமல்ல, இந்த சதி திட்டத்துக்கு தன்னுடைய மாமியாரும் உடந்தை என்று பிந்து சொன்னதை கேட்டு நிலைகுலைந்து போனார் திவ்யா... இதனால் அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்துள்ளார்.. நாளுக்கு நாள் இந்த கொடுமை அந்த வீட்டில் அதிகமாகவும், வேறு வழியின்றி தன்னுடைய உறவினர்களிடம் நடந்த கொடூரங்கள் அனைத்தையும் கண்ணீருடன் கொட்டி தீர்த்துள்ளார்.

    கைமாறிய பணம் - 3 பேர் கைது

    விவரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக மானந்தவாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைத்துள்ளனர். வழக்கைப் பதிவு செய்த மானந்தவாடி போலிஸார், உடனடி விசாரணையில் இறங்கினார்கள்..

    இதில் முதல் குற்றவாளியாக கைதானவர் மாமியார்தான். அடுத்ததாக மனோஜ்ஜையும் கைது செய்தனர்.. பிந்து தலைமறைவாகி தப்ப முயன்றார்.. ஆனால் அவரையும் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மானந்தவாடி துணை காவல் கண்காணிப்பாளர் வி. லதீஷ் தலைமையிலான காவல் குழுவினர், இந்தச் சதியில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்...!!

    English Summary

    Mother-in-Law Locks Daughter-in-Law Inside Room.. Money Changes Hands Moments Later! Who Was the Sexual Predator?