மற்றொரு நாள் மற்றுமொரு ராஜினாமா என்ற உதயநிதி.. உளறல்நிதியின் மற்றொரு நாள் மற்றுமொரு உளறல் என்ற தவெக

  • சென்னை: ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து தாங்கள் செய்த ஒட்டகபேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும். புதிதாகத் தொடங்கியுள்ள சோபா, டேபிள், சேர், டீபாய் வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே சோபாமாடல் என்று சொல்லி சொல்லிப் பார்க்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தவெக ஐடி விங்க் விமர்சனம் செய்துள்ளது.

    Advertisement

    அண்மையில் சி விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதேபோல் கரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன், அந்த கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் ஜேடிசி பிரபாகரனிடம் அளித்தார்.

    Advertisement

    அண்மையில் தான் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்த அவர், இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் எம்ஆர்விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை எதிர்க்கட்சிகள் குதிரை பேரம் என்று விமர்சித்து வருகின்றன.

    திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த சேபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

    Advertisement

    ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு எல்லை மீறி போகிறது என்பதையே இது காட்டுகிறது. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் பர்ச்சஸ்-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்."தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்" என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த சீனில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
    சோபா மாடல் அரசின் இந்த வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" இவ்வாறு உதயநிதி கூறியிருந்தார்.

    Advertisement

    இதற்கு தவெக ஐடி விங்க் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "உளறல்நிதியின் மற்றொரு நாள். மற்றுமொரு உளறல்.

    ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து தாங்கள் செய்த ஒட்டகபேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும்.

    புதிதாகத் தொடங்கியுள்ள சோபா, டேபிள், சேர், டீபாய் வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே சோபாமாடல் என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். தன் வியாபாரம் செல்ஃப் எடுக்காமல் சிதறிப் பதறுகிறார். Extreme-ஆக vex ஆகி விரக்தியைக் கொட்டுகிறார்.

    Advertisement

    தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும் திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி வாங்கிய செய்த நிதிஎல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார்.

    மூச்சுவிடக்கூட ஸ்கிரிப்டை நம்பி வாழும் இந்த ஸ்க்ரிப்ட்நிதி ஆட்சியைப் பிடிக்க மறைமுகமாகத் திட்டமிட்டுத் தொட்ட கதையும் தொடமுயன்று தோற்ற கதையும் அம்பலமாகுமோ என்று பதறுகிறார்.

    பற்பல லிங்கங்களையும் பல்வேறு செல்வங்களையும் வெண்டிங் மெஷனில்போட்டு வெளுத்த தி.மு.க.வை, மக்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெளுவெளுவென வெளுக்கப் போவது உறுதி" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    MR Vijayabhaskar, the MLA for the Karur constituency, resigned from his post today and handed over his resignation letter to Assembly Speaker J.D.C. Prabhakaran. TVK has hit back at Udhayanidhi's criticism regarding this matter.