வாசற்படியில் மண்குளவி கூடு கட்டினால் பண மழை பொழியுமா? தொட்டால் ஆபத்தா? அறிவியல் சொல்வது என்ன?

  • சென்னை: திடீரென்று ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தால், வீட்டின் ஜன்னல் ஓரத்திலோ அல்லது பெருமளவில் பயன்படுத்தாத சுவர்களின் மூலைகளிலோ களிமண்ணால் ஆன உருண்டையான, நீளமான மர்மக் கூடுகள் திடீரென முளைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஏதோ பூச்சி என்று அசால்ட்டாகக் கடந்து போகும் இந்த கூடுகளைக் கட்டுவது வேறு யாருமல்ல, நம் கிராமத்துப் பக்கங்களில் பரவலாகக் காணப்படும் மண்குளவிகள்தான். இந்த மண் குளவிகள் ஆபத்தா? அதிர்ஷ்டமா?

    Advertisement

    உண்மையில், இந்த சின்ன சின்ன பூச்சிகளை நேர்த்தியான என்ஜினியர் என்றே சொல்லலாம்.. மிக நேர்த்தியான வீடுகளை கட்டிக்கொள்கின்றன.. . ஈரமான களிமண்ணை தன் வாயில் கவ்வி எடுத்துவந்து, தன் எச்சிலைக் கலந்து, சுவர்களில் அடுக்கடுக்காக களிமண் குழாய்களைப் போல உறுதியாகக் கூடுகளை அமைத்து கொற்கின்றன.. இது ஒரு தனி கலைதான்.

    Advertisement

    ஆனால், இப்படி திடீரென நம் வீட்டிற்குள் குடியேறும் இந்த மண்குளவிகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமா அல்லது ஏதேனும் பெரிய ஆபத்தின் அறிகுறியா என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயல்புதான்.

    மண் குளவிகள் ஆபத்தா

    நம்முடைய பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக சாஸ்திரங்களின்படி, வீட்டில் குளவி கூடு கட்டுவது ஒரு மிகச் சிறந்த லட்சுமி கடாட்சமாகப் பார்க்கப்படுகிறது. வீட்டின் சூழல் நேர்மறை ஆற்றலாலும், தூய்மையான அதிர்வுகளாலும் நிறைந்திருக்கும் இடங்களில்தான் குளவிகள் கூடு கட்ட முன்வரும் என்று சொல்வார்கள்.

    இதனால் நீண்ட நாட்களாக முடங்கிக்கிடந்த பண வரவுகள் மீண்டும் தேடி வரும் என்றும், தள்ளிப்போன சுபகாரியங்கள் மற்றும் விசேஷங்கள் தங்குதடையின்றி வீட்டில் நடக்கும் என்றும் பெரியோர்கள் நம்புகிறார்கள்.

    Advertisement

    அதிர்ஷ்டம் ஒருபுறமிருக்க, இதில் மறைந்திருக்கும் அறிவியலும் சுவாரஸ்யமானது. பச்சை புழுக்களை வேட்டையாடும் குளவி, தன் கொடுக்குகளால் விஷத்தைப் பாய்ச்சி அவற்றை முழுமையாகக் கொல்லாமல் மயக்கமடைய மட்டுமே செய்கிறது. பிறகு அந்தப் புழுக்களைத் தன் கூட்டுக்குள் அடைத்து முட்டையிட்டு வாசலை மூடிவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் குளவிக்குஞ்சு, அந்த புழுக்களை உணவாகச் சாப்பிட்டு வளர்ந்து பறக்கிறது.

    வீக்கம், வலி, அலர்ஜி

    பொதுவாக மண்குளவிகள் மனிதர்களை தேடி வந்து கொட்டுவதில்லை என்றாலும், சாஸ்திர ரீதியாக இது அதிர்ஷ்டம் என்று சொல்லப்பட்டாலும், பாதுகாப்பின் அடிப்படையில் சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குளவி கொட்டினால் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்படுவதுடன், சிலருக்கு அலர்ஜி போன்ற உடல்நலப் பிரச்சனைகளும் உண்டாகக் கூடும்.

    Advertisement

    குறிப்பாக, சிறு குழந்தைகளோ அல்லது முதியவர்களோ இருக்கும் வீடாக இருந்தால், எதிர்பாராத ஆபத்துகள் அசம்பாவிதமாக மாறாத வகையில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது மிக மிக அவசியம்.

    அறிவியல் சொல்வது இதுதான்

    அதனால் வீட்டிற்குள் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாத ஓரமான இடத்தில் கூடு இருந்தால் அதை அப்படியே விட்டுவிடலாம். மாறாக, மனிதர்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது அடிக்கடி கை படும் ஆபத்தான பகுதிகளிலோ இருந்தால், யாருக்கும் பாதிப்பு வராத வகையில் அவற்றை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் அப்புறப்படுத்துவதே புத்திசாலித்தனம்.

    மொத்தத்தில் மண்குளவி மனிதர்களை தாக்கி அழிக்காத ஒரு சாதுவான பூச்சி என்பதால், பயிர்களை அழிக்கும் புழுக்களை வேட்டையாடி இயற்கையின் சமநிலையைப் பேணும் ஒரு பயனுள்ள உயிரினமாகவே பார்க்கப்படுகிறது....!!!

    English Summary

    Mud Wasp Nest at Home.. Does It Bring Money? Is It Dangerous to Touch? What Science Says