முகேஷ் அம்பானின்னா அதிரடி தான்.. இன்றே அறிவிப்பு.. இன்றே தாக்கல்.. வருகிறது Jio IPO

  • இந்திய வர்த்தக சந்தையிலும், முதலீட்டு சந்தையிலும் பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வந்த கேள்விக்கு தற்போது அதிகாரப்பூர்வ பதில் கிடைத்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms) நிறுவனத்தின் ஐபிஓ எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.

    Advertisement

    ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ (IPO) செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இன்று அறிவித்துள்ளார்.

    Advertisement

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 49வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஐபிஓ தொடர்பான வரைவு ஆவணம் (DRHP) நிறுவனத்தின் இயக்குநர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றே செபிக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.

    இது, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான ஜியோவின் ஐபிஓ செயல்முறை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதை உறுதி செய்கிறது.

    இந்த அறிவிப்பு, இந்திய பங்குச்சந்தையில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்று. நேற்று தேசிய பங்குச்சந்தை (NSE) தனது ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், ஜியோவும் தாக்கல் செய்ய உள்ளது. ஆனால் எப்போது ஐபிஓ வெளியாகும் என்பது தெரியாது.

    Advertisement

    ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ அளவு சுமார் 3 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என சந்தை வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியின் பெரும்பகுதி, நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள கடன்களை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது

    அடுத்த தலைமுறை கையில் ஜியோ ஐபிஓ

    ஜியோ ஐபிஓ செயல்முறையை முகேஷ் அம்பானியின் மகன்கள் அகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி மற்றும் மகள் ஈஷா அம்பானி ஆகியோர் தலைமையேற்று நடத்துவார்கள் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

    ஜியோ ஐபிஓ ஏன் முக்கியத்துவம்

    2016-இல் தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு துறையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. தற்போது 524 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உடன் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டுகளில் டிஜிட்டல் சேவைகள், கிளவுட், நிறுவன தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளிலும் ஜியோ தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

    Advertisement

    இதன் மூலம் இந்த ஐபிஓ, வெறும் டெலிகாம் நிறுவன ஐபிஓ ஆக அல்லாமல் இந்தியா உலக அளவில் போட்டித்திறன் மிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கும் திறனை வெளிப்படுத்தும் ஐபிஓ ஆக இருக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார். இந்திய பங்குச்சந்தையில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக ஜியோவின் பட்டியலிடுதல் பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தைக்கு இரட்டை உற்சாகம்

    ஜியோவின் ஐபிஓ அறிவிப்பு, தேசிய பங்குச்சந்தை (NSE) தனது ஐபிஓ ஆவணங்களை தாக்கல் செய்த மறுநாளே வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய முதலீட்டு சந்தைகள் விரைவில் இரண்டு மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீடுகளை சந்திக்க உள்ளன.

    English Summary

    Mukesh Ambani has officially announced the start of Jio Platforms’ IPO process, with the Draft Red Herring Prospectus (DRHP) approved by the board and set to be filed with SEBI today. The much-awaited listing of India’s largest telecom company is expected to be one of the biggest IPOs in Indian market history.