சென்னை: சென்னையில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அமைச்சர் அருண்ராஜுக்கு எதிராக பேசினோம் என்ற ஒரே காரணத்திற்காக இன்று இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கூறியுள்ளார்.
மேலும், சிறுநீர் கூட கழிக்க விடாமல் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள். இந்த மாதிரி ஒரு மோசமான அராஜகமான காவல்துறையின் ஆட்சி நடக்கிறது. ஜனநாயக நாட்டில் ஒரு உண்ணாநிலை போராட்டம் கூட நடத்த முடியவில்லையா எனவும் விஜய் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் 2,500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் ஐந்தாண்டு கால சேவையை முடித்தவுடன், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனப் பணிநியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பதால் பணிநிரந்தரம் செய்ய கோரி இன்று சென்னை எழும்பூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட வந்தவர்களை நேற்று நள்ளிரவே போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இன்று போராட வந்தவர்களையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது அவர்கள், நியாயம் வேண்டும்.. நியாயம் வேண்டும்.. விஜய் அரசே நியாயம் வேண்டும் என்று கூறி போராடினர். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாரதி கூறியதாவது:- பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசை வலியுறுத்துவதற்காக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருந்தோம். நேற்று போலீஸ் தரப்பில் இருந்து நீங்க தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ரகசிய தகவல் தெரியவந்ததை அடுத்து உங்கள் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் அதற்கு முன்பே காவல்துறை அதிகாரிகளுக்கு போன் செய்த போது அவர்கள் எடுக்கவில்லை. நாங்க முறைப்படி என்ன சொன்னோம் என்றால், நாளைக்கு மாலைக்கு பிறகு போராட்டம் இல்லை. உண்ணா நிலை போராட்டம் மட்டும் தான் கேட்கிறோம். ஆனால் அதையும் தாண்டி, அமைச்சர் அருண்ராஜுக்கு எதிராக பேசினோம் என்ற ஒரே காரணத்திற்காக இன்று இந்த போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அமைச்சரை கடந்த வாரம் சந்திக்கும் போது அவர்கள் எங்களுக்கு இருக்கை தரவில்லை. கேர்லசா பாக்குறோம் என்று சொன்னார். இதை தான் வெளியில் சொன்னோம். இதற்காக எங்கள் போராட்டத்துக்கு அனுமதி தரவில்லை. இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் சேலம், நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சை, திருவண்ணாமலை, கோவை, தேனி, கரூர், நீலகிரி, ஈரோடு, நெல்லையில் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரியில் பெண்களை நேற்று நள்ளிரவில் கைது செய்து சிறுநீர் கூட கழிக்க விடாமல் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள். இந்த மாதிரி ஒரு மோசமான அராஜகமான காவல்துறையின் ஆட்சி நடக்கிறது. ஜனநாயக நாட்டில் ஒரு உண்ணாநிலை போராட்டம் கூட நடத்த முடியவில்லை. டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட அனுமதி இல்லை என்பது போல இங்கேயும் அதே சூழலை உருவாக்குகிறீர்களா.. ஏன் இந்தனை மாவட்டங்களில் வீடு வீடாக போ கைது பண்ண வேண்டிய அவசியம் என்ன? நீங்க தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததை தானே நிறைவேற்ற சொல்கிறார்கள். கைது பண்ணிட்டால் இது முடிந்திடும் என நினைக்கிறாங்க.. சீப்பை ஒழித்துவைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறாங்க.. இது நடக்காது.. பெண்களை சிறுநீர் கூட கழிக்க விடாமல் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? எதற்கு வாக்குறுதி கொடுத்தீங்க. அவங்க கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. யார் யாரெல்லாம் அராஜகம் பண்ணுனாங்களோ அவங்க எல்லாம் வீழ்ந்து தான் போயிருக்கிறார்கள். காவல்துறை அராஜகம் நடக்கிறது. எங்க போராட்டம் தொடரும்." என்றார்.விஜய் அரசே நியாயம் வேண்டும்
அமைச்சருக்கு எதிராக பேசினோம் என்று
டாக்டர் போல வந்து வந்து ஸ்டான்லி மருத்துவமனை விடுதியில் நகை திருடிய பெண்.. சிக்கியது எப்படி?
சிறுநீர் கூட கழிக்க விடாமல்
இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கூடாது.. டெல்லி போலீஸ் திடீர் தடை.. உச்சக்கட்ட குழப்பம்
சீப்பை ஒழித்துவைத்து விட்டால்