திருவண்ணாமலை கோவிலுக்குள் இஸ்லாமியரை அழைத்து செல்வதா? அமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் பாஜக

  • சென்னை: திருவண்ணாமலை கோவிலுக்குள் இஸ்லாமியரை அழைத்து செல்வதா என்றும், அமைதியான சமூகத்தில், தேவையற்ற குழப்பங்களை உருவாக்காதீர்கள் எனவும் அமைச்சர் ரமேஷுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்ட விதிகளை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, கோவிலின் பாரம்பரிய முறையை மதிக்காமல், அண்ணாமலையார் கோவிலுக்குள் நுழைந்தவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுங்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதே போன்று பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தொப்பி அணிந்து வந்த நபர்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மதம் மகா தீபம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று திருவண்ணாமலைக்கு வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவும், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்களுடன் அதிகாரிகள், உதவியாளர்கள், போலீசார் வந்தனர். இதில், ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால், தொப்பி அணிந்துவிட்டு வந்து இருந்தார். இதனை பார்த்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, எதன் அடிப்படையில் அவரை உள்ள கூட்டிட்டு வர்றீங்க?.. எங்களாலும் இதுபோல தொப்பி அணிந்து 10 பேரை அழைத்துவர முடியும் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அமைச்சர் ரமேஷ் மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்தனர்.

    Advertisement

    நயினார் நாகேந்திரன் கண்டனம்

    இந்த சம்பவத்திற்கு தற்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழகக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர், கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையக் கூடாது என, கடந்த 2024 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள், தொப்பி அணிந்த இஸ்லாமியரை நீங்கள் உடன் அழைத்து சென்றது கடும் கண்டனத்திற்குரியது.

    பெருங்கோபத்திற்கு ஆளாகாதீர்கள்

    இந்துக் கோவில்களின் புனிதத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டிய இந்து அறநிலையத்துறையின் அமைச்சரான நீங்கள், கோவில்களின் ஆகம விதிகளை தொடர்ந்து அவமதிப்பது, ஆணவத்தின் வெளிப்பாடே தவிர வேறில்லை.

    Advertisement
    தொப்பி போட்டு எப்படி வரலாம்? அமைச்சர் ரமேஷ் ஆதவுடன் வந்தவருக்கு எதிர்ப்பு! திருவண்ணாமலையில் பரபரப்பு

    இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தவெக MLA முஸ்தபா அவர்களை முதல் வரிசையில் அமர்த்துவதன் மூலமும், அண்ணாமலையார் கோவிலுக்குள் "உதவியாளர்" என்ற பெயரில் ஒரு இஸ்லாமியரை உடன் அழைத்து செல்வதன் மூலமும் நீங்கள் என்ன நிறுவ முயற்சிக்கிறீர்கள்? இதில் உங்களுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது?

    இந்து மதத்தின் மீதுள்ள நம்பிக்கையில், பிற மதத்தினர் தானாக இந்துக் கோவில்களுக்கு வருவது என்பது வேறு. ஆனால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் ஒருவரை அழைத்து வருவது என்பது வேறு. எனவே, எப்படியாவது "Limelight" இல் நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதையாவது செய்து சமூகத்தின் பெருங்கோபத்திற்கு ஆளாகாதீர்கள் அமைச்சரே!

    Advertisement

    சட்ட விதிகளை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, கோவிலின் பாரம்பரிய முறையை மதிக்காமல், அண்ணாமலையார் கோவிலுக்குள் நுழைந்தவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுங்கள்! இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

    நாராயணன் திருப்பதி கண்டனம்

    பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் அமைச்சர் ரமேஷ் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எல்.முருகன் விஷயத்தில் இன்னும் சஸ்பென்ஸ்.. தமிழக பாஜக தலைவரா? வானதி சீனிவாசன் சொன்ன அந்த விஷயம்

    திருவண்ணாமலை கோவிலில் தங்கள் மத அடையாளமான தொப்பி அணிந்த இஸ்லாமியரை அழைத்து சென்ற ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

    Advertisement

    சட்டத்தை மதிக்காத அமைச்சர்கள்

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் (30 ஜனவரி 2024)படி கொடிமரம்/ துவஜஸ்தம்பம் தாண்டி ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு நுழைய அனுமதி இல்லை. ஒரு வேளை, ஹிந்து அல்லாத ஒருவர் வழிபட விரும்பினால், தனக்கு அந்த கடவுளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், ஹிந்து கலாச்சாரம் மற்றும் கோவிலின் விதிகளை பின்பற்றுவதாகவும் எழுத்து பூர்வமாக தெரிவிப்பதோடு அந்த கோவிலின் பதிவேட்டில் பதிய வேண்டும்.

    தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. கண் கலங்கி அழுத ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஆறுதல்

    இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? அந்த இஸ்லாமியர் சட்டப்படி ஹிந்து கடவுளை ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதிமொழியை எழுதி கொடுத்தாரா? இதே போன்று மற்ற வழிபாட்டு தளங்களில் நடைபெற்றால் அந்த விதிகளை மீறுவார்களா அமைச்சர்கள்? ஐயோ! சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கிறார்களே என்று பொங்கியெழுவார்களே தமிழக அரசியல்வாதிகள்? சட்டத்தை மதிக்காத அமைச்சர்கள் எப்படி சட்டத்தை அமல்படுத்துவார்கள்?" என்று கூறியுள்ளார்.

    English Summary

    Tamil Nadu BJP President Nainar Nagendran has condemned Minister Ramesh for taking a Muslim individual inside the Tiruvannamalai temple, urging him not to stir up unnecessary discord within a peaceful society. Similarly, BJP chief spokesperson Narayanan Thirupathi has also condemned the incident.