சென்னை: முஸ்தா செயல்பாடு மீண்டும் சட்டசபையில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, சட்டப்பேரவைக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று சபாநாயகர் எச்சரித்திருந்த நிலையில், அதன்பிறகும் அதேபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!
கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான ஷாஜகான் எழுந்து நின்று, தனது செல்போனில் இருந்த குறிப்புகளை பார்த்தபடி தீர்மானத்தை ஆதரித்து பேசினார். இதனை கவனித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், உடனடியாக குறுக்கிட்டு எச்சரிக்கை விடுத்தார். "சட்டப்பேரவை விதிகளின்படி, அவைக்குள் செல்போனை கொண்டு வரக்கூடாது, செல்போனை பார்த்து படிப்பதும், பயன்படுத்துவதும் விதிகளுக்கு முரணானது.. இந்த அறிவுரை ஷாஜகானுக்கு மட்டுமே கிடையாது.. அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும்" என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார். இந்நிலையில், சபாநாயகரின் இந்த எச்சரிக்கை வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, நேற்று மீண்டும் அதேபோன்ற சம்பவம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. தவெக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ மதார் பதுருதீன் முஸ்தபா, காவல்துறையினருக்கான கோரிக்கைகளை சட்டப்பேரவையில் முன்வைத்து பேசினார். அப்போது அவர் தனது செல்போனை பார்த்தபடி பேசினார். இதனை கவனித்த சபாநாயகர், உடனடியாக முஸ்தபாவை கண்டித்தார். ஏற்கனவே செல்போனை பயன்படுத்தக்கூடாது என்று அவையில் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்த சபாநாயகர், செல்போனை வைத்துப் பேச வேண்டாம் என்றும், சட்டப்பேரவை விதிகளை உறுப்பினர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரித்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. எனினும், இந்த சம்பவத்துக்கு அடுத்ததாக முஸ்தபா தொடர்பாகவே இன்னொரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவசர பணிக்காக அவையிலிருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், மாற்று பேரவை தலைவராக முஸ்தபா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தினார். இதற்கு முந்தைய நாளான செப்டம்பர் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ சத்யபாமாவும் மாற்று பேரவைத் தலைவராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியிருந்தார். இதனால், ஒருபுறம் சபாநாயகரின் எச்சரிக்கையை எதிர்கொண்ட முஸ்தபா, மறுபுறம் அதே நாளில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியது பேசுபொருளாகியுள்ளது. அதேசமயம், செல்போனை பார்த்து பேச கூடாது என மாற்று சபாநாயகர் முஸ்தபாவை சபாநாயகர் எச்சரித்தற்கு சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் குவிந்தபடி உள்ளன.. "இதுகூட கூட தெரியாதவரை சபாநாயகர் சீட்டில் ஏன் உட்கார வைத்தீங்க? ஊருக்கெல்லாம் ஒரு சட்டம், உங்களுக்கு மட்டும் ஒரு சட்டமா? எப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் அமர்ந்த இடத்தில் இப்படி எல்லாம் அமர்ந்து பேசுவதை நாம் கேட்பது கேட்பது என்பது நம்முடைய தலைவிதி? செல்போனை எடுத்து முஸ்தபா படிக்க ஆரம்பித்துமே, அவரை ஏன் சபாநாயகர் தடுக்கவில்லை" என்றெல்லாம் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன்
முஸ்தபாவை கண்டித்த சபாநாயகர்
சபாநாயகர் இருக்கை
இதுகூட கூட தெரியாதவரை சபாநாயகர் சீட்டில்?