டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் என் சந்திரசேகரன் பெறும் ஊதியம்! இத்தனை கோடியா? அடேங்கப்பா

  • சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக இருந்த என். சந்திரசேகரன் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு பணி நீட்டிப்பு விரும்பவில்லை என்று கூறி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சந்திரசேகரனின் ஊதியம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்று டாடா. இந்த குழுமத்தை சேர்ந்த முதன்மை நிறுவனமான டாடா சன்ஸ் கார் உற்பத்தி, ஏர் இந்தியா, ஹோட்டல் தொழில்கள், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறது.

    Advertisement

    என் சந்திரசேகரன்

    டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த என். சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2017 ஆண்டு முதல் அப்பதவியில் இருந்த சந்திரசேகரன், அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு பணி நீட்டிப்பு விரும்பவில்லை என்று கூறி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    என். சந்திரசேகரன் ராஜினாமாவால் டாடா சன்ஸ் குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை சேர்ந்த டாடா சன்ஸ் தலைவராக இருந்த என். சந்திரசேகரனின் ஊதியம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    ரூ.158.6 கோடி ரூபாய்

    என். சந்திரசேகரனுக்கு கடந்த ஆண்டு ரூ.158.6 கோடி ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனம் தனது இயக்குனர்களுக்கு வழங்கும் ஊதிய விவரத்தை வெளியிட தொடங்கியதற்கு பிறகு தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச ஊதியம் இதுவேயாகும். டாடா சன்ஸ் வெளியிட்ட ஆண்டு அறிக்கையின் படி, அவரது ஊதியம் மற்றும் அலவன்ஸ்கள் சேர்த்து ரூ.17.9 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 140.7 கோடி ரூபாயும் அவருக்கு கமிஷனாக கிடைத்த தொகை என 2026 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தமாக கணக்கிட்டால், சந்திரசேகரன் பெற்ற தொகை ரூ.685 கோடியை தாண்டும். இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் கார்ப்பரேட் எக்ஸ்கியூட்டிவ்களில் ஒருவராக சந்திரசேகரனே உள்ளார். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் 2026 நிதி ஆண்டில் ரூ.176 கோடி ஊதியமாக பெற்றுள்ளார்.

    Advertisement

    சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம்

    சந்திரசேகரன் பெற்ற ஊதியம் அதை விட குறைவு என்றாலும் அதிக ஊதியம் பெறுபவர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாத ஒருவராக தொடர்ந்து சந்திரசேகரன் உள்ளார். அவரது ஊதியம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2025 நிதி ஆண்டில் ரூ.155 கோடியும், 2024 நிதி ஆண்டில் ரூ.134 கோடியும், ஊதியமாக பெற்றுள்ளார்.

    சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக ஊதியம் பெறும் நபராக இருப்பவர் சவுரவ் அகர்வால் ஆவார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும், எக்ஸ்கியூட்டிவ் டைரக்டராகவும் அவர் உள்ளார். அவரது ஊதியம் கடந்த நிதி ஆண்டில் ரூ.34 கோடியாகும்

    Advertisement

    ராஜினாமாவுக்கு காரணம் என்ன?

    டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த என். சந்திரசேகரன், ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தார். சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அந்த இடத்திற்கு சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டார்.

    10 ஆண்டுகளாக அந்த பொறுப்பில் இருந்து வந்த என். சந்திரசேகரன் திடீர் ராஜினாமா முடிவுக்கு டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது. நோயல் டாடாவின் எதிர்ப்பால் 2027-க்குப் பின்னர், சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவராக நீட்டிக்க ஆதரவு கிடைக்கவில்லை எனவும் இதன் காரணமாக ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    English Summary

    N Chandrasekaran Chairman of Tata Sons—India's largest business conglomerate—has announced that he will step down from his position, stating that he does not wish to seek an extension of his tenure beyond February of next year. Let us look at the details, including his remuneration.