எள்ளு வய பூக்கலையே.. 8000 ஓட்டு கூட வாங்கலையே! 19 லட்சம் திரள்நிதி வசூலித்தும்.. வேதனையில் தம்பிகள்!

  • சென்னை:மதுராந்தகம் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் இரு தொகுதிகளையும் கைப்பற்றி உற்சாகத்தில் இருக்கிறது தமிழக வெற்றி கழகம். தோல்வியில் வெற்றி என திமுக தங்களை சமாதானப்படுத்திக் கொண்டுள்ளது. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதால் அதிருப்தியில் இருக்கிறது அதிமுக. ஆனால் டெபாசிட் கூட தக்க வைக்க முடியாமல் வருத்தத்தில் இருக்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள். 17 லட்சம் திரளநிதி திரட்டியும் 8000 வாக்குகளைக் கூட இரு தொகுதிகளிலும் சேர்த்து பெறாதது அந்த கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.

    Advertisement

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மதுராந்தகம் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவடைந்து இருக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக அந்த இரு தொகுதிகளிலும் வென்றிருந்தது.

    Advertisement

    அந்த தொகுதிகளின் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். சில நாட்களில் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இடைத்தேர்தல் முடிவுகள்

    கடந்த அக்டோபர் 6ஆம் தேதி வாக்கு பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முடிவில் இரு தொகுதிகளையும் தமிழக வெற்றிக்கழகம் கைப்பற்றியுள்ளது. அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் மீண்டும் சட்டமன்றத்திற்குள் செல்கின்றனர். ஆனால் இரண்டு தொகுதிகளை தன் வசம் வைத்திருந்த அதிமுக மாற்று வேட்பாளர்களை நிறுத்தியும், எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டும் அந்த தொகுதிகளை இழந்துள்ளது.

    Advertisement
    சீமான் மீது ஆக்சன் எடுக்கலாமா? சென்னைக்கு திரும்பியதும்.. விஜய் கேட்ட கேள்வி.. பயங்கர பிளான்!

    எடப்பாடி பழனிச்சாமி

    இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வரும் நிலையில் அவர் பதவி வழங்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் பலரும் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    நாம் தமிழர்

    அதே நேரத்தில் கடந்த தேர்தலில் மூன்றாவது இடத்தில் இருந்த திமுக இரண்டு தொகுதிகளிலுமே இரண்டாவது இடத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தோல்வி என்றாலும் தங்களுக்கு வெற்றி தான் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருப்பதும் கவனிக்கத்தக்கது. இது ஒரு புறம் இருக்க இந்த தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட்டை பறி கொடுத்து இருக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினரும், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களும்.

    Advertisement

    டெபாசிட் இழப்பு

    தங்கள் வாக்கு வங்கியை சோதிப்பதற்காகவே தேர்தலில் களமிறங்கினோம் என கம்யூனிஸ்டுகள் சொல்லிவிட்ட நிலையில், நிச்சயம் வெற்றி பெறுவோம் என உரக்க சொல்லியது நாம் தமிழர் கட்சி. ஒரு மடி மேலே போய் சிறந்த எம்எல்ஏவாக நான் செயல்படுவேன் என முழங்கினார் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா. இது ஒரு புறம் இருக்க சீமான் குறித்தும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

    சீமான் செயல்பாடுகளை பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்.. குறுக்கே அரசு வழக்கறிஞர் சொன்ன விஷயம்!

    திரள்நிதி வசூல்

    இந்த இடைத்தேர்தலை சந்திக்க நாம் தமிழர் தம்பிகள் திரள்நிதி மூலம் உதவ வேண்டும் என 75 லட்சம் ரூபாய் டார்கெட் வைத்திருந்தார் சீமான். கிட்டத்தட்ட 19 லட்சம் ரூபாய் திரள் நிதி மூலம் வசூலிக்கப்பட்டது. சரியாக சொல்லப்போனால் 19 லட்சத்து 13 ஆயிரத்து 85 ரூபாய் கிடைத்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் தாராபுரம் தொகுதியில் வெறும் 5268 வாக்குகளும், மதுராந்தகம் தொகுதியில் வெறும் 2,709 வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தாலே 2 தொகுதிகளிலும் சேர்த்து 7977 வாக்குகள் மட்டும்தான் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

    Advertisement

    டெபாசிட் இழப்பு,

    18 லட்சம் ரூபாயை தம்பிகளிடம் திரள்நிதியாக பெற்று வெறும் 7000 வாக்குகளை மட்டும் தான் வாங்கினீர்களா? 10000 வாக்குகள் கிடைத்து இருந்தால் கூட பெருமையாக இருந்திருக்கும். ஆனால் அது கூட கிடைக்கவில்லை, டெபாசிட்டும் போச்சே! என சில தம்பிகள் புலம்பி வருகின்றனர். இதை வைத்து அவர்களை கிண்டல் செய்து வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

    English Summary

    Naam Tamilar Katchi secures 7,977 combined votes in the Madurantakam and Dharapuram bypolls despite raising over ₹19 lakh through crowdfunding.