சென்னை: நாகர்கோவிலில் வீடு கட்டுவதற்காக நிலம் தேடிய பெண்ணுக்கு, ஒரு இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று சொல்லப்பட்டதால் அவரும் அதை நம்பியிருக்கிறார்... ஆனால், அந்த நிலத்தை நேரில் பார்க்கப் போனபோதுதான் விஷயம் வேறு மாதிரி திரும்பியிருக்கிறது... இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று அந்த பெண் அதிர்ந்து போயிருக்கிறார்.. என்ன நடந்தது கன்னியாகுமரியில்?
காஞ்சீபுரம் மாவட்டம் குளப்பாக்கம், ஊனமாஞ்சேரியில் வசித்து வருபவர் ஜெயந்தி.. 58 வயதாகிறது.. இவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம். சென்னையில் வங்கியில் வேலை பார்த்து வரும் தனது மகளுக்காக நாகர்கோவிலில் வீடு கட்ட நிலம் தேடி வந்திருக்கிறார் ஜெயந்தி.
அப்போதுதான் பால்பண்ணை அருகே உள்ள நடுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவர் ஜெயந்திக்கு அறிமுகமாகியிருக்கிறார். 43 வயதான காந்தி, கட்டையன்விளை பகுதியில் சுமார் 11 சென்ட் காலிமனை இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த நிலத்துக்கு ரூ.1.38 கோடி கொடுத்தால் கிரயம் செய்து தருவதாக காந்தி சொல்லவும், உடனே ஜெயந்தியும், முதற்கட்டமாக ரூ.34 லட்சத்தை கொடுத்திருக்கிறார். இந்தப் பணத்தை ஜிபே மற்றும் RTGS மூலமாக தந்துள்ளதாக தெரிகிறது.. அட்வான்ஸ் பணம் தந்துவிட்டதால், அந்த நிலத்தை நேரில் பார்க்க ஜெயந்தி சென்றிருக்கிறார்.. அப்போதுதான், தனக்கு தருவதாக காந்தி சொன்ன அந்த 11 சென்ட் நிலம், காந்திக்கு சொந்தமானதே இல்லை என்பது ஜெயந்திக்கு தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர் ஏற்கனவே அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, தான் கொடுத்த ரூ.34 லட்சத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார்... ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காந்தி பல்வேறு காரணங்களை சொல்லி காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணத்தை கேட்டு வந்த ஜெயந்தியை விரட்டியனுப்பினாராம் காந்தி. இதற்கு பிறகுதான் ஜெயந்தி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.. இந்த புகார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்ஷுல் நாகர், ஐபிஎஸ் கவனத்துக்கு சென்றது. உடனடியாக காந்தியை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாம் சுந்தர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, இதுதொடர்பான வழக்கையும் பதிவு செய்து, காந்தியையு கைது செய்தனர். இப்போது காந்தி ஜெயிலில் உள்ளார்.. வீடு கட்டுவதற்காக நிலம் தேடிய பெண்ணிடம், தனக்கு சொந்தமானதாக இல்லாத இடத்தை காட்டி, ரூ.1.38 கோடிக்கு வாங்கித் தருவதாக ஆசை காட்டி, ரூ.34 லட்சத்தையும் காந்தி சுருட்டியது, நாகர்கோவிலில் பரபரப்பை தந்து வருகிறது. நிலம் வாங்கும்போது இப்படியெல்லாம் ஏமாறுவது அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. இனியாவது பணத்தை கொடுப்பதற்கு முன்பு, நிலம் யார் பெயரில் இருக்கிறது, உண்மையான உரிமையாளர் யார் என்பதை சரிபார்த்துக்கொள்வது நல்லது.. ஆவணங்களை பார்க்காமல், தாய் பத்திரம், EC பார்க்காமல், ஒருவரை மட்டும் நம்பி லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்தால், இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளத்தான் நேரிடும்...!!!காலி மனை - 34 லட்சம் ரூபாய்
காந்தி கணக்கு
போலீசுக்கு போன ஜெயந்தி
தாய்ப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்