சென்னை: டான்ஸ் கிளாஸ் செல்கிறார் என்பதற்காகவே மனைவியை கொன்றுள்ளார் கணவர். இரவு உணவை மனைவி பரிமாறவில்லையாம். இதுதான் கணவருக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.. இதனால், கைகளாலேயே ஓங்கி தாக்கி மனைவியை கொன்றே விட்டார்.. இப்படியொரு கொடுமை மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் தீவிரமாக நடத்தி வருகிறார்கள். முழு விவரத்தை பார்ப்போம்..!!
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரின் ஜிங்காபாய் தக்லி பகுதியில் யாமினி கிருஷ்ணகாந்த் யாதவ். இவரது கணவர் கிருஷ்ணகாந்த் யாதவ். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கிருஷ்ணகாந்த் தம்பதி சம்பவத்தன்று இரவு சுமார் 9.45 மணியளவில் கிருஷ்ணகாந்த் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனக்கு சாப்பாடு பரிமாறுமாறு யாமினியிடம் கேட்டுள்ளார். ஆனால், யாமினி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான டான்ஸ் பயிற்சிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், “நீங்களே சாப்பாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று யாமினி சொன்னாராம்.. உடனே கணவன், மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டான்ஸ் கிளாஸ் கிளம்பிய மனைவி இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ணகாந்த் கோபத்தில் யாமினியின் கழுத்தைப் பிடித்து நெரித்துள்ளார். அத்துடன் பலமுறை பலமாக தலை, முகம் என பல இடங்களில் கொடூரமாக குத்தி, யாமினியை படுக்கையில் தூக்கி வீசியிருக்கிறார்.. இதனால், படுகாயமடைந்து வலியால் கதறியிருக்கிறார் யாமினி.. அத்துடன் உடல்நிலையும் படுமோசமாகியிருக்கிறது.. இதைப் பார்த்து பயந்து பதறிப்போன கணவர், மருந்து வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார்.. அதற்குள் யாமினியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் யாமினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். முதலில் இந்த மரணம் விபத்து காரணமாக ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.. ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான், யாமினியின் கழுத்து எலும்பு முறிவு, குடல் பகுதியில் கடுமையான காயங்கள் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் சந்தேகம் கணவர் மீது திரும்பியது. பிறகு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், யாமினியை கொன்றது கணவர் என்பது உறுதியானது.. குடல், வயிறு படுகாயம் யாமினியை கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கைகளால் பலமாக தாக்கினாராம். அதனால்தான், வயிறு வலி அதிகமாக யாமினி கதறி அழவும் மருந்து வாங்க சென்றதாகவும், ஆனால், மெடிக்கல் ஷாப் மூடியிருந்ததால், வீட்டுக்கு திரும்பிவிட்டாராம். அப்போது யாமினி உடல்நிலை சீரியஸாகிவிட்டதால், தானே மருத்துவமனைக்கு தூக்கி சென்றதாகவும், அதற்குள் யாமினி இறந்துவிட்டதாகவும், போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் கிருஷ்ணகாந்த். இதற்கு பிறகு, விபத்து மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, கிருஷ்ணகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த தம்பதி சுமார் ஒரு ஆண்டுக்கு முன்புதான் உத்தரப் பிரதேசத்தில் இருந்து நாக்பூருக்கு வந்துள்ளனர். கிருஷ்ணகாந்த் தரம்பேத் பகுதியில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாராம்.. யாமினி எந்த வேலைக்கும் செல்லவில்லை என்றாலும், டான்ஸ் மீது பிரியமாக இருப்பாராம். சம்பவத்தன்று டான்ஸ் பயிற்சிக்கு செல்லும் முன்பு, சாப்பாட்டு விஷயத்தில் ஆரம்பித்த தகராறு, கொலையாக முடிந்து, ஒரு பெண்ணின் உயிரையே பறித்துள்ளது. இப்போது 2 குழந்தைகளும் தாய், தகப்பன் இல்லாமல் அழுது கொண்டிருக்கிறார்கள்...!!