விஜய்க்கு புடவை சால்வை.. அதை கொச்சைப்படுத்தாதீங்க.. கோபத்தின் உச்சிக்கே சென்ற நயினார் நாகேந்திரன்

  • சென்னை: வடபழனி-பூந்தமல்லி இடையே சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். முதலமைச்சர் விஜய் மோடியின் உறவு குறித்து பேசு பொருளாகியுள்ளது. நயினார் நாகேந்திரன் ப்ரோட்டோகாலை மீறி மேடையில் அமர்ந்தது, விஜய்க்கு புடவை போல சால்வை அணிந்தது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று கூறினர். எவ்வளவு குறைத்தனர் என்று வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. டாஸ்மாக் கொள்முதலில் 11 நிறுவனங்களை ரத்து செய்தனர். பிறகு அதை மீண்டும் எடுத்தனர். அதை எடுக்க வேண்டிய காரணம் என்ன. இதில் யார் குளறுபடி செய்தனர் என்பதை அரசு தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் எங்குமே சட்டம் ஒழுங்கு சரியில்லை.

    Advertisement

    தவறாக பேச வேண்டாம்

    முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிக்கு விஐபி யாரை கூப்பிடுகிறார்களோ அவர்கள் போகலாம். அதற்கு நிறைய முன் உதாரணம் உள்ளது. இதை ரொம்ப சொல்ல விரும்பவில்லை. அதை சொன்னால் நான் ஏதோ தொடர்ந்து ஒரு சார்பில் முதலமைச்சர் சார்ந்தவர்களை விமர்சிப்பது போன்ற பிம்பம் உருவாகும். இதை விமர்சிப்பவர்கள் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உரையாடியபோது நாங்கள் இல்லை.

    நாங்கள் காவி சிலையில் திருவள்ளுவர் வைத்துள்ளோம். மற்றவர்களின் அலுவலகங்களில் திருவள்ளுவர் இருக்கிறாரா. அவரவர் விருப்பப்படி உடை அணிகிறோம். இதுவும் இப்படித்தான். நாட்டின் பிரதமர் வரும்போது வரவேற்பது முதலமைச்சரின் மரபு. அதை விஜய் கடைபிடித்துள்ளார். நானும் முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது சால்வை போட்டேன். அது மரியாதை. அவர் நம் முதலமைச்சர். பிரதமரை முதலமைச்சர் வழியனுப்பவதை தவறாக பேச வேண்டாம்.

    Advertisement
    முதல்வர் விஜய்க்குப் பொன்னாடைக்கு பதிலாகப் புடவையை போர்த்தினாரா நயினார்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

    கொச்சைப்படுத்தாதீர்

    நான் சால்வை அணிவித்ததை எல்லாம் கொச்சைப்படுத்த வேண்டாம். ஒரு கட்சி தலைவர் என்கிற அடிப்படையில் மரியாதை செலுத்தினோம். அதை கொச்சப்படுத்தாதீர்கள். பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சரின் கையை பிடித்து இருவரும் சேர்ந்து மெட்ரோ திட்டத்தை தொடக்கி வைத்தனர். முதலமைச்சர் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளார். அதுதான் எங்களின் கோரிக்கையும். இந்தியாவுடன் சேர்ந்து தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் பேசியுள்ளார்.

    அதுவும் இல்லாமல் இது நாட்டிற்கு தேவையான பிரச்சனை அல்ல. விஐபி கூப்பிட்டதால் நான் சென்றேன். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை அதிகமுள்ளது. மதிப்புக்குரிய அமைச்சர் நிர்மல்குமார் அந்தப் பிரச்சகளை பார்க்கலாம். மற்றதை பேசுவதால் மக்களுக்கு எந்த நல்லதும் இல்லை. நிறைய முன் உதாரணங்கள் உள்ளன. விஐபி கூப்பிட்டதால் போனேன். அவ்வளவு தான். அதை விட்டுவிடுங்கள்" என்றார்.

    English Summary

    BJP Nainar Nagendran said, To honour CM Vijay i weared shawl. Don't spread rumour on it.