நீட் விலக்கு! முதல்வர் ஜோசப் விஜய்க்கு விவரம் பத்தலை! பொசுக்குனு சொன்ன நயினார் நாகேந்திரன்

  • சென்னை: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்த முதல்வர் ஜோசப் விஜய்க்கு விவரம் இருக்கும் என நினைத்தேன், ஆனால் அவருக்கு போதிய விவரம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு வெட்கமாக இல்லையா? மாணவர்களா போராட்டம் நடத்துகிறார்கள்? இல்லையே யாரோ ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் தேசத்துரோகிகள்.

    Advertisement

    அந்த போராட்டத்தில் அதிகமாக ஈடுபடுபவர்கள் குண்டர்கள், கம்யூனிஸ்டுகள், பாலஸ்தீன நாட்டின் கொடியை வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவில் என்ன வேலை?

    கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னால் காங்கிரஸ் கட்சி நிற்கும் ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த காவல்துறை விஜயின் ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு வந்தவுடன் யார் உங்களுடன் கூட்டணியில் இருந்தார்கள் அன்று திமுக இருந்தது.

    அதன் பிறகு 10 ஆண்டுகள் மாணவர்கள் தேர்வு எழுதி வந்தார்கள். 20 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி 11 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது.

    Advertisement

    முக்கியமான மசோதாக்கள் எதை கொண்டு வந்தாலும் இது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். காங்கிரசையும் செய்கின்ற இந்த செயல் ஒரு துரோக செயல். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸ் கட்சி இவ்வளவு கோழைத்தனமாக இருப்பார்கள் என்று தெரியாது.

    கரப்பான்பூச்சி கட்சிக்கு பின்னால் காங்கிரஸ் கட்சி நிற்கும் ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது பாரதிய ஜனதாவின் வேலை. அதை நியாயமாக செய்துள்ளது. இதற்கு ஏன் தர்மேந்திர பிரதான் அதை விலக வேண்டும். அவர் ஒரு அமைச்சர் கீழே உள்ளவர்கள் தான் இதை லீக் செய்துள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிறார். முதலில் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றியது யார்? ஜோசப் விஜய் விவரம் உள்ளவர் என்று நினைத்தேன்.

    மாணவர்கள் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதை வேண்டாம் என்றால் அது எப்படி அது முடிந்து போன பிரச்சனை. காங்கிரஸ் கட்சியை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முற்றுகையிடப்படும் என இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil nadu BJP Nainar Nagendran criticises CM Vijay to shift education to State list. He doesnt have enough knowledge.