கைகுலுக்கிய ஸ்டாலின்.. திமுகவுடன் நயினார் நாகேந்திரன் காட்டிய நெருக்கம்.. பாஜக கூட்டணியில் இணைகிறதா?

  • சென்னை: திமுக எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புக்கு முன் நயினார் நாகேந்திரன் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வந்த போது, திமுகவின் முன்னணி தலைவர்கள் பலரும் நயினார் நாகேந்திரன் நெருக்கம் காட்டினர்.

    Advertisement

    கடந்த சில மாதங்களாகவே திமுக - பாஜக இடையில் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் உதவியை பாஜக நாடியுள்ளதாக காங்கிரஸ், தவெக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

    Advertisement

    இருப்பினும் மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது திமுகவும் அதில் இடம்பெறும் என்று பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின், பாஜகவை பற்றி எந்த வார்த்தையையும் பேசவில்லை. சமீப காலமாகவே டெல்லியில் மட்டும் பாஜக எதிர்ப்பை திமுக பலமாக பதிவு செய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் தவெக எதிர்ப்பு அரசியலையே முன்னெடுத்து வருகிறது. அதேபோல் நயினார் நாகேந்திரன் சில நாட்களுக்கு முன் அவசர அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதனால் மத்திய இணையமைச்சர் பதவியை நயினார் நாகேந்திரன் பெறுவார் என்று பேச்சுகள் எழத் தொடங்கி இருக்கிறது. அதற்கேற்ப தமிழக பாஜக தலைவர் பொறுப்பு வானதி சீனிவாசனுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில் திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழாவின் வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து கைகுலுக்கி சென்றார். அதற்கு முன்பாக நயினார் நாகேந்திரன் திருமண மண்டபத்திற்கு வந்த போது, திமுகவின் முக்கிய தலைவர்கள் அவருடன் அதிக நெருக்கம் காட்டினர்.

    முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். நயினார் நாகேந்திரன் முன்பு இருந்தே திமுகவினருடன் நெருக்கமாக இருந்து வருபவர் தான். இருப்பினும் திமுக - பாஜக கூட்டணி பேச்சுகள் அடிபட தொடங்கி இருக்கும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    English Summary

    Nainar Nagendran: DMK Leaders Share Warm Moments with BJP Nainar Nagendran at Manoj Pandian Wedding Reception