விஜய் பற்றி அநாகரீக பேச்சு.. செய்தியாளர்கள் கேள்விக்கு திரும்ப திரும்ப ஒரே பதிலை சொன்ன நயினார்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நயினார் நாகேந்திரன், தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, எக்ஸ் தளத்தில் உள்நோக்கத்துடன் அப்படி பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான் என்று கூறியிருந்தார். நயினார் நாகேந்திரனிடம் அவரது பேச்சுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட போது, திரும்ப திரும்ப ஒரே பதிலை கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

    Advertisement

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் குறித்து நேற்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டசபையில் முதல்வர் விஜய் அப்பாவைக் காணோம் என்று குட்டிக் கதை கூறி விமர்சனம் செய்தது தொடர்பாக பேசினார். சட்டமன்றத்திற்கு போய் அப்பாவை எங்கே? என்று கேட்கிறார்கள்.

    Advertisement

    எனது பேச்சை திரித்து

    வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார்கள் சட்டமன்றத்தில் அப்பாவை தேடினால் எப்படி? இப்படிப் பட்டவர்கள் ஆட்சிதான் இங்கே நடந்து கொண்டு இருக்கிறது" என்றார். நயினார் நாகேந்திரனின் இந்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு தவெக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, கஸ்தூரி உள்ளிடோரும் நயினாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

    நயினார் நாகேந்திரனுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. தனது பேச்சுக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்கள் வந்ததால், இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நயினார் நாகேந்திரன், 'ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால்,

    Advertisement

    அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருக்கிறாரே?

    எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்" என்று பதிவிட்டார். இந்த நிலையில், நயினார் நாகேந்திரனிடம் அவரது சர்ச்சை பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த நயினார் நாகேந்திரன், ஒரே பதிலை மீண்டும் மீண்டும் அளித்தார்.

    நான் என்னுடைய விளக்கத்தை ஏற்கனவே கொடுத்துள்ளேன், அதில் பாருங்கள்.. என்று கூறினார். அமைச்சர்கள், அண்ணாமலை உள்ளிட்டோரும் உங்கள் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்களே என்று கேட்டனர். அதற்கும், "என்னுடைய பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள்.. என்னுடைய பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று திரும்ப திரும்ப ஒரே பதிலை அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

    Advertisement

    நடிகை திரிஷா குறித்து பேச்சு

    முன்னதாக, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நகேந்திரன் பேசினார். விஜய் பற்றிய விமர்சனத்தை முன்வைத்த நயினார் நாகேந்திரன், விஜய் அனுபவம் இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வந்தால்தான் முதலில் எல்லாமே நடக்க முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனினின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நடிகை திரிஷா தரப்பில் இருந்து கண்டனம் வெளியாகியிருந்தது. திரிஷா தரப்பில் கூறும் போது, 'ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதப் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான நிலைப்பாடு. மேலும், உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது விவாதத்தில் பொறுப்பையும், சமநிலையையும் பராமரிக்க வேண்டும்" என்று கூறியிருதார்.

    Advertisement

    மன்னிப்பு கோரினார்

    நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியிருந்தார். தவறி வந்த ஒரு வார்த்தை. உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நயினார் கூறியிருந்தார். இந்த சூழலில் மீண்டும் நயினார் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    English Summary

    Nainar Nagenthran, BJP leader who faced strong criticism over his controversial remarks about Tamil Nadu Chief Minister Vijay, reiterated that he had no ulterior motive behind his comments. When reporters questioned him about the remarks, he repeatedly gave the same response before quickly leaving the spot.