சில்வர் ஸ்பூன் ஷாக்! நயினார் நாகேந்திரன் முகத்தில் அடித்ததுபோல் சொன்ன ராம்மாதவ்? அப்ப ராஜ்யசபா சீட்?

  • சென்னை: எல்.முருகன் ராஜினாமாவால் காலியாகும் ராஜ்யசபா சீட்டுக்கு நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த இடத்தை பிடிக்க தமிழக பாஜக தலைவர்கள் பலரும் போட்டி போடுகின்றனர். நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் முயற்சிக்கும் நிலையில், பட்டியலின சமூகத்தினருக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதுகுறித்து எக்ஸ்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி பார்ப்போம்.

    Advertisement

    தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், தனது அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்ததையடுத்து, அவரது இடத்தைப்பிடிக்க தமிழக பாஜக தலைவர்கள் பலரும் ஆலாய் பறந்து வருகிறார்கள்.

    Advertisement

    எல்.முருகன் போஸ்ட்டிங்

    முருகனின் ராஜினாமாவால் காலியாக இருக்கும் ராஜ்யசபா இடத்துக்கு நவ்மபர் 12-ந்தேதி தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம். நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்திரராஜன், வானதி, பொன்.ராதா கிருஷ்ணன், சக்கரவர்த்தி என பலரும் முட்டி மோதுவதாக தெரிகிறது.

    ஆனால், எல்.முருகன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரது இடத்தில் இன்னொருவருக்கு இடம் கொடுக்க வேண்டுமானால் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும் . தமிழக பாஜகவில் அருந்ததியர் சமூக தலைவர்கள் யாரும் இல்லாவிட்டால், பாஜகவில் இருக்கும் பட்டியலின நிர்வாகிகளில் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று பாஜகவிலுள்ள பட்டியலினத்தவர்கள் பாஜக தேசிய தலைமைக்கு கோரிக்கை அனுப்பியிருக்கிறார்களாம்.

    Advertisement

    கோதாவில் குதித்த நயினார் நாகேந்திரன்

    உடனே இதுகுறித்து தகவலறிந்த தமிழக பாஜகவினர், நம் கட்சியில் பட்டியலினத்தவர்கள் யாரும் பெரிய அளவில் இல்லையே என்று விவாதிக்கிறார்கள். ஆனால், பட்டியலினத்தவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்கிற குரல் மட்டும் பாஜக தலைமையை நெருக்கி வருகிறது.

    இந்த நிலையில், டெல்லிக்கு சென்று சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து, ராஜ்யசபா சீட்டை உறுதிசெய்து கொண்டு வரவேண்டும் என்று நேற்று டெல்லிக்கு கிளம்பத் திட்டமிட்டிருந்தார் நயினார் நாகேந்திரன். தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளரான ராம் மாதவ்விடம் சொல்லாமல் டெல்லி க்கு செல்ப்வது ஆரோக்கியமாக இருக்காது என நினைத்து, அவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

    Advertisement

    வேஸ்ட் ஆஃப் டைம்

    ராம் மாதவ்வோ, "ராஜ்யசபா சீட்டை பிடிக்க, நீங்கள் இங்கு வரவேண்டாம்.,, அதுக்கு வாய்ப்பே இல்லை.. ஏற்கனவே யார் என்பது முடிவாகி விட்டது. அதனால் டெல்லிக்கு வருவது வேஸ்ட் ஆஃப் டைம்" என்று நயினாருக்கு அட்வைஸ் பண்ணியுள்ளார் ராம் மாதவ்.

    ஆனாலும் இதில் நம்பிக்கை இல்லாத நயினார் நாகேந்திரன், துணை ஜனாதிபதி சி.பி.ஆரின் உதவியை கேட்டுள்ளார். அவரோ, "என்னிடம் இந்த சீட்டுக்கு உங்கள் சாய்ஸ் யார் என்று கேட்டால், உங்களது பெயரை சொல்கிறேன்,,. ஒருவேளை கேட்காத பட்சத்தில் நானாக பேசமுடியாது" என்று நயினாருக்கு பதில் சொல்லியிருக்கிறாராம் சி.பி.ஆர். என்கிறார்கள் நயினாருக்கு நெருக்கமான பாஜகவினர்.

    Advertisement

    மத்திய பிரதேச தலைவரா?

    இதனிடையே, மத்திய பிரதேசத்தில் இருந்துதான் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை, மீண்டும் தமிழகத்துக்கு அந்த வாய்ப்பு தரக்கூடாது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை மத்திய பிரதேச பாஜக தலைவர்களிடமிருந்து பாஜக தேசிய தலைமைக்கு அழுத்தம் தரப்பட்டுக்கொண்டிருக்கிறது என்கிற தகவலும் கமலாலய வட்டாரங்களில் பரவியுள்ளது...!!

    - நமது சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Nainar Nagendran Faces a Rajya Sabha Setback? Ram Madhav's Remark Sparks Questions