ஐயோ இப்படி ஒரு அமைச்சர் உண்டாய்யா உலகத்துல? தலை தலையாய் அடித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன்! கலகல!

  • சென்னை: ஜனநாயகன் திரைப்படம் பார்க்க முதல்வர் விஜய்யிடம் 3 மணி நேரம் லீவு கேட்டிருப்பதாக அமைச்சர் விக்னேஷ் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலையில் அடித்துக் கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இவரது செய்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம், சென்சார் பிரச்சினைகளுக்காக வெளியீட்டில் தாமதமாகி இன்று வெளியாகியுள்ளது.

    Advertisement

    விஜய்யின் கடைசி படம் என்பதை விட அவர் முதல்வரான நிலையில் இந்த படம் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் தேர்தலில் வென்று அமைச்சர்களாக உள்ள நிலையில் அவர்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் அமைச்சர் விக்னேஷ் ஜனநாயகன் படம் பார்ப்பதற்கு 3 மணி நேரம் முதல்வர் விஜய்யிடம் விடுமுறை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் இதை விக்னேஷ் மறுத்துள்ளார். "நான் லீவு கேட்டதாக வீடியோ ஆதாரம் இருந்தால் அதை காட்டுங்கள்" என்றார்.

    Advertisement

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அவர் அப்போது கூறுகையில், 2, 3 கோடி கொடுத்து மருத்துவ சீட் பெறுபவர், கத்தரிக்கோலை வயிற்றில் வைத்து தைத்துவிட்டு போய்விடுவார். அப்படிப்பட்ட மருத்துவர் தேவையா? நீட் தேர்வு போராட்டத்தில் பாலஸ்தீன நாட்டின் கொடி வைத்திருப்பவனுக்கு என்ன வேலை?

    நீட் தேர்வு சுமூகமாக நடந்து முடிந்து ரிசல்ட் வெளிவந்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் பிரதான் ஏன் பதவி விலக வேண்டும்?மாணவர்கள் போராட்டத்தில் காங்கிரஸின் ராகுல்காந்திக்கு என்ன சம்பந்தம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இந்த நிலையில் அவரிடம் ஜனநாயகன் படத்தை பார்க்க அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் விடுமுறை கேட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது நயினார், தலையில் கைவைத்தபடியே, "ஐயோ, இதெல்லாம் எங்க கொண்டு சொல்ல, இப்படி ஒரு அமைச்சர் உண்டாய்யா உலகத்தில்! தலையில்தான் அடித்துக் கொள்ளணும்?

    முதல்வரின் படத்திற்கு லீவு கேட்டு படம் பார்க்க போனா என்னத்த சொல்றது, லீவு லெட்டர் எழுதி கொடுக்கச் சொல்லுங்கள். இவ்வாறு நயினார் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு புகலிடம் இல்லாமல் கரப்பான்பூச்சி பின்னால் போய் உட்கார்ந்திருக்கிறார். இங்க இருக்கும் ஜோசப் விஜய்யிடம் அமைச்சர்கள் படம் பார்க்க லீவு கேட்கிறார்கள்.

    Advertisement

    பழனி கோயில் நில மோசடியில் தனது உறவினருக்கு எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் ரமேஷ் சொல்கிறார். அதெல்லாம் அவரை யார் கேட்டது, யார் மோசடி செய்தார்கள் என்பதை கண்டுபிடித்துத்தானே சொல்ல சொன்னோம்!

    ராகுல் காந்தி கரப்பான்பூச்சி பின்னால் ஒளிந்திருப்பதை கண்டித்தும் நல்ல முறையில் அரசியல் செய்யக் கோரியும் தமிழக காங்கிரஸ் கமிட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    English Summary

    Nainar Nagendran jovially criticises Minister Vignesh as he said that he was asking CM Vijay to grant him leave for watching Jananayagan. But the minister refuses it.