ஆரம்பமாகிறதா தூயசக்தியின் ஊழல் வேட்டை? கட்டு ஃபைல்களுடன் ஆளுநரை சந்தித்த நயினார் நாகேந்திரன்

  • சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சந்தித்து, தவெக அரசுக்கு எதிராக ஒரு புகாரை அளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் நேற்றைய தினம் ட்விட்டரிலும் தகவல்களை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆரம்பமாகிறதா "தூயசக்தி"யின் ஊழல் வேட்டை?

    Advertisement

    தவெக ஆட்சியில் லஞ்சத்தின் அடிப்படையில் தான், அரசு வழக்கறிஞர்களின் நியமனங்கள் நடப்பதாக அந்தக் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அளித்த புகாரின் பரபரப்பு அடங்கும் முன்னரே, அரசு சார்பில் நடத்தப்பட்ட உதவிப்பேராசிரியர்களுக்கான தேர்வில், 2006-இல் பிறந்த ஒருவரும், பெயரே இல்லாத ஒருவரும் இடம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு வேலைகளை தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப் படைக்கும் ஆளும் அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.

    "நாங்களும் ஊழல் செய்ய மாட்டோம், செய்பவர்களையும் விட மாட்டோம்" என்று வசனம் பேசிய தவெக தலைவர் விஜய் , முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, தவெகவினரின் மாமூல் அராஜகம், டெண்டர் விடுவதில் முறைகேடு, உதவிப்பேராசிரியர் தேர்வில் குளறுபடிகள், அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் ஊழல், வேண்டியவருக்கு அரசு பதவிகள் கொடுப்பது என எங்கு திரும்பினாலும் ஊழல்களும் முறைகேடுகளும் மட்டும் தான் கொடி கட்டிப் பறக்கின்றன. அரசு வேலையை நம்பி பல கனவுகளுடன் காத்துக்கிடக்கும் பட்டதாரிகளின் நம்பிக்கைகள் இப்படி சுக்குநூறாக உடைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    Advertisement

    எனவே, முதல்வர் ஜோசப் விஜய் தனது ஆட்சியில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலைகளை விலை பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும்! இவ்வாறு அவர் விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் தவெக அரசு மீது குற்றம்சாட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து புகார் மனுவை கொடுத்துள்ளார். அவருடன் பாஜக நிர்வாகிகள் சிலரும் சென்றுள்ளனர்.

    தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செய்து வருகிறது. முதல்வர் விஜய்யின் முதல் குறிக்கோளே ஊழலை ஒழிப்பதுதான். கடந்த காலங்களில் தமிழகத்தின் நிதிநிலை குறித்தும் மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

    Advertisement

    மேலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் திடீர் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் கட்டணங்களை நோட்டீஸ் போர்டில் வெளிப்படையாக ஒட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Nainar Nagendran meet Acting Governor Rajendra Arlekar at Raj Bhavan and gave a complaint file on TVK government.