திரிஷா விஜய் பெயரில் எழுத்தாளரா? என்னங்க சார் நடக்குது! பதில் சொல்லுங்க சிஎம் சார்! நயினார் அட்டாக்!

  • சென்னை: பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும், விஜய் என்ற பெயரில் அதிகமான எழுத்தாளர்கள் புத்தகம் வைக்கப்பட்டத, திரிசா விஜய் பெயர் கொண்ட எழுத்தாளர் பெயரும் வைக்கப்பட்டுள்ளது எப்படி? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய் அவர்," கடந்த திமுக அட்சியும் தவெக ஆட்சியும் பெரியார் பெயரை சொல்லி வருகின்றனர்.

    Advertisement

    பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் சொல்லும் நிலையில் ஏன் இதுவரை புகார் இல்லை. யார் மீதும் வழக்கு இல்லை. இதுவே சந்தேகத்தை எழுப்புகிறது. அகல் விளக்கு என்ற நிறுவனத்தின் மூலம் ஊழ்ல் நடப்பதாக சொல்லும் நிலையில் அமைச்சருக்கும் இதில் தொடர்பா? என்ற கேள்வி உள்ளது.

    நயினார் நாகேந்திரன்

    அதிகமான நூல்கள் திமுக ஆட்சியில் கொடுத்தால் தவெக ஆட்சியில் தான் நூலகம் திறக்கப்பட்டது.
    நூலகத்தில் உள்ள நூல்களின் எழுத்தாளர்கள் விபரம் முறையாக கையாளப்பட்டதா என்ற கேள்வி உள்ளது.
    பதிப்பகம் குறித்த தகவல் என்பதே இல்லை.எழுதாதா புத்தகம் வைக்கப்பட்டதாக சந்தேகம் உள்ளது. சங்க இலக்கிய நூல்கள் வைக்கப்படதில் பல குழப்பம் உள்ளது. விஜய் என்ற பெயரில் அதிகமான எழுத்தாளர்கள் புத்தகம் வைக்கப்பட்டது. திரிசா விஜய் பெயர் கொண்ட எழுத்தாளர் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement
    ஜென் Z தலைமுறையே உங்களை தூக்கி வீசும்.. வார்த்தையை விட்ட விஜய்.. நயினார் நாகேந்திரன் வார்னிங்

    திருப்பரங்குன்றம்

    எழுத்தாளர் யார் என்ற விசாரணை நடத்தில் தகவலை அறிக்கையை முதல்வரும் அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும். ஊழல் வழக்கில் 5 கோடியில் லஞ்சம் வாங்கியதாக திருப்பரங்குன்றம் விளக்கு ஏற்ற விடாமல் தடுத்த ஆய்வாளர் கைதாகி உள்ளார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை கடந்த ஆண்டு முறையாக கையாளாத அரசு இப்போது ஆட்சியில் இல்லை. ங்கள் ஏற்றவிடுவீர்களா என்றும் தெரியவில்லை. நீங்கள் இருப்பதும் இல்லாததும் தெரியவில்லை.

    தவெக

    திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றவேண்டும் என்பது நீதிமன்றம் உத்தரவு அதனை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு நீதிக்கு தலைவணங்கி திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றவேண்டும். குதிரை பேரத்தை தொடங்கி வைத்தது தவெக. தவெக வென்ற உடன் காமராஜ் எம்.எல்.ஏவை விலைக்கு வாங்கினார்கள்
    . ஆட்சி அமைத்து 6 மாதத்தில் மக்களின் மன நிலை உள்ளது.

    Advertisement
    லிங்கமலையில் கிறிஸ்தவர்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது? விஜய் அரசுக்கு நயினார் சரமாரி கேள்வி

    சீமான்

    அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் நான் முடிவு செய்ய முடியும். சீமான் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதம் கிடையாது. எல்லோரும் ஜாலியாக இருக்கலாம். அதே நேரத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறி இருப்பது போதை பழக்கத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது. இது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். தனிபட்ட முறையில் இந்த அரசுக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை.

    அம்பை இடைத்தேர்தல்

    மக்களுக்கு முதல்வராக செய்யவேண்டியதை செய்யவில்லை. கொலை அதிகரித்துள்ளது,பல அரசு அதிகாரிகள் வி.ஆர் எஸ் கொடுத்துவருகின்றனர். அம்பையில் நான் போட்டியிடுவதா என்பதை இதுவரை முடிவில்லை.
    தேர்தல் கூட்டணி என்பது தேர்தலை பொருத்து. கடந்த முறை எங்களிடம் ஆதரவு கேட்டனர் இன்னும் தேர்தல் அறிவிப்பு இல்லை. தேசிய தலைமை முடிவு தான் தேர்தல் குறித்த முடிவு அறிவிப்பாகும். பொதுவேட்பாளருக்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு என்றால் நாங்களும் தேசிய தலைமையில் பேசி முடிவு அறிவிப்போம்.
    யாருக்கு பின்னாடியும் பாரதிய ஜனதா கட்சி இல்லை." என்றார்.

    English Summary

    BJP leader Nainar Nagendran seeks CM Vijay’s explanation over alleged fake authors and irregularities in Coimbatore’s Periyar library.