பெண்களுக்கு ’மாமா.. அண்ணன்’னு சொல்றது! போலீஸை விட்டு லத்தி சார்ஜ் பண்றது! விஜய்யை விளாசிய நயினார்!


  • சென்னை: நான் பெண்களுக்கு 'மாமா.. அண்ணன்' என முதல்வர் விஜய் பேசுகிறார். ஆனால் மாணவிகள் மீது லத்தி சார்ஜ் செய்கின்றனர். டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மாணவிகளை தாக்கிய காவல்துறை குறித்து தாய்மாமா என சொல்லும் விஜய் ஏன் இதுவரை எதுவும் கேட்கவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," கோவில் நிலங்களை யாருக்கும் கொடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் உள்ளது. கோவில் நிலங்களை பூஜை செய்பவர்களுக்கு பயிர் செய்ய மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

    Advertisement

    நெல்லையப்பர் கோவில் இடங்களில் குடியிருப்புகள் உள்ளது. கோவில் நிலம் கோவில் நிலமாக இருக்கட்டும் குறைந்தபட்ச வாடகையை பெற்றுகொள்ள கேட்டுகொள்ளபட்டது. 1947 ல் தென்கரை திருமூல சுவாமி கோவில் நிலம் லட்சுமண அய்யர் என்பவர் 80 ஆண்டுகள் வைத்திருந்தார்.

    நயினார் நாகேந்திரன்

    அதில் நீதிமன்றம் கோவிலுக்கு தான் நிலம் சொந்தம் என சொன்னது.அதுபோல் பல வழக்குகள் கோவிலுக்கு தான் நிலம் என தீர்ப்புகள் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டு கோவில் நிலங்கள் தாரை வார்க்கப்படுகிறது.
    அரசுக்கு தெரிந்தே கோவில் நிலங்கள் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. லஞ்சம் ஊழல் இல்லை என முதல்வர் மேடையில் மட்டுமே வசனம் பேசுகிறார்.

    Advertisement

    விஜய்

    நான் பெண்களுக்கு 'மாமா.. அண்ணன்' என முதல்வர் விஜய் பேசுகிறார். ஆனால் மாணவிகள் மீது லத்தி சார்ஜ் செய்கின்றனர். சினிமா பாணியில் வீரவசனம் மட்டுமே முதல்வர் விஜய் பேசுகிறார். டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மாணவிகளை தாக்கிய காவல்துறை குறித்து தாய்மாமா என சொல்லும் விஜய் இதுவரை எதுவும் கேட்கவில்லை. மேகதாது அணை கட்டும் பணிக்கான அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது.

    கோவில் நிலங்கள்

    அணை கட்டுமான பணி தொடங்கினால் காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு போய்விடும். ஜூன் 12 ல் மேட்டூர் அணை திறக்கவேண்டும் ஆனால் அது நடக்கவில்லை. பாஜக கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருந்த வரை காவிரி பிரச்சனையில்லாமல் இருந்தது. கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு அதன் உரிமையை குறைந்த வாடகைக்கு கொடுக்கலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு.

    Advertisement

    பழனி கோவில் நிலம்

    பழனியில் 50 கோடிக்கு மேல் உள்ள இடத்தை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்சாரதுறை அமைச்சர் துறையில் ஈடுபாடுடன் இல்லை. மின் துறையில் 67000 காலிப்பணி இடங்கள் உள்ளது. பணியாளர்களை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். வயர்மேன் பற்றாக்குறை உள்ளது. இப்படி காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ளதால் மின்சாரம் தடையில்லாமல் வழங்கமுடியாத சூழல் உள்ளது. தேசபற்று மொழிபற்று இரண்டையும் சமமாக பார்கக்கவேண்டும் அப்படி பார்க்க தவறுபவர்கள் அரசியலில் இருக்கின்றனர். என்ன செய்வது" என்றார்.

    English Summary

    BJP leader Nainar Nagendran criticized the Vijay-led government over police action, temple lands, TASMAC protests and governance.