சென்னை: தவெக அரசு தனது 100 நாள் ஆட்சியை விளம்பரப்படுத்தும் விதம், திரைப்பட விளம்பரத்தை போல உள்ளது. சிங்கப்பெண் மற்றும் பெண்கள் பாதுகாப்பு திட்டங்களும் சரியில்லை.. எங்கேயுமே ஒரு போலீஸ்காரரை நிறுத்த முடியாது. சிஸ்டத்தை வலுப்படுத்தாமல் இத்தகைய அடையாளத் திட்டங்களால் பயன் இல்லை. இந்தத் திட்டங்கள் விஜய் தனது வாக்கு வங்கியை தக்கவைக்க பயன்படுத்தும் ஒரு சூத்திரம் ஆகும் என்று மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் களம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "நயினார் நாகேந்திரனை தொட்டால் அமித்ஷா சும்மா விடமாட்டார் என்று விஜய் தரப்பு பயப்படுகிறது. அதனால்தான் அவரைத் தைரியமாக எதிர்க்காமல் அமைதியாக இருக்கிறார்கள். நயினாரைக் கண்டித்து பேசுபவர்கள் பெயர் அளவில் மட்டுமே பேசுகின்றனரே தவிர, யதார்த்தத்தில் அவர்களுடன் இணக்கமாகவே இருக்கிறார்கள்.
விஜய்க்கு அரசியல் மற்றும் சட்டமன்றத்தை சந்திக்கக்கூடிய துணிச்சல் இல்லை. அவர் எதிர்காலத்தில் மோடியின் பாணியை பின்பற்றுபவராக மாறிவிடுவார். வார்த்தைகளை விடுவதற்கும் செயலில் செயல்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. விஜய்யால் வெற்றிகரமான சினிமா எடுக்க முடியுமே தவிர, அரசியல் நிர்வாகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட முடியுமா என்பது கேள்விக்குறியாகும். ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் போன்ற நடிகர்களின் பேச்சுகளுக்கு பின்னால் மக்கள் ஏமாறுகிறார்கள். மக்களின் அறியாமையால்தான் இத்தகைய அரசியல் சூழல் நிலவுகிறது. மக்கள் எம்.ஜி.ஆர் நடித்த படங்களைப் பார்த்துவிட்டு, அவர் பாடும் பாடல்கள் தங்களுக்காகவே பாடப்படுவதாக நம்பி ஆதரவு கொடுத்தார்கள். உண்மையில், அந்தப் பாடல்களை எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்கள். ஆனால், அதன் புகழை நடிகர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற மேதைகள் யாரும் தற்போது இல்லை. தனுஷ் போன்ற நடிகர்கள் "நான் ஒரு தமிழன்" என்ற பிம்பத்தை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். இது போன்ற நடிகர்களின் அரசியல் ஆசைக்கு மக்களின் அறியாமையே காரணமாக அமைகிறது. திமுக ஆட்சியை விமர்சிக்கும்போது, ஆட்சி நிர்வாகத்தில் எந்தவொரு சாதனையையும் அவர்கள் செய்யவில்லை, ஜெயலலிதா ஆட்சியில் இருந்த நிர்வாகத் துணிச்சல் கூட தற்போதைய ஆட்சியாளர்களிடம் இல்லை.. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக ஆதரிக்கக்கூடும். காங்கிரஸ் கட்சியினர், திமுக பாஜகவுடன் இணக்கமாக செல்வதை தங்கள் கொள்கைக்கு பின்னடைவாக கருதுகிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதால், அது எந்த வடிவத்தில் வருகிறது என்பதைப் பொறுத்தே திமுகவின் நிலைப்பாடு அமையும். தென்னிந்தியாவில் மட்டுமே வலுவாக இருக்கும் காங்கிரஸிற்கு, திமுகவின் நகர்வுகள் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன. அமித்ஷா கத்தியை காட்டினால் திமுக அமைதியாகிவிடும், அதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் நிலைமை மாறிவிடும். தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பதன் மூலம், கடந்த 3 தேர்தல்களில் திமுக கையாண்ட பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு நீர்த்துப்போய்விடும். சுப்ரீம் கோர்ட் கட்டாயப்படுத்தினால் திமுக அந்த முடிவை செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் மட்டுமே ஓட்டு வங்கி உள்ளது. வட மாநிலங்களில் அந்தக் கட்சி வலுவிழந்துள்ளதால், ராகுல் காந்தி இங்கிருந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தன் செல்வாக்கை இழந்து வருகிறது. தவெக அரசு தனது 100 நாள் ஆட்சியை விளம்பரப்படுத்தும் விதம், சினிமா விளம்பரத்தை போல உள்ளது. சிங்கப்பெண் மற்றும் பெண்கள் பாதுகாப்பு திட்டங்களும் சரியில்லை.. எங்கேயுமே ஒரு போலீஸ்காரரை நிறுத்த முடியாது. சிஸ்டத்தை வலுப்படுத்தாமல் இத்தகைய அடையாள திட்டங்களால் பயன் எதுவும் கிடையாது.. இந்தத் திட்டங்கள் விஜய் தனது வாக்கு வங்கியை தக்கவைக்க பயன்படுத்தும் ஒரு சூத்திரம் ஆகும். போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விளம்பரங்கள் மட்டுமே. உண்மையான புள்ளிவிவரங்களை போலீஸிடம் கேட்டு வெளியிட வேண்டும். காலை உணவுத் திட்டம் மற்றும் பிற சமூக நலத் திட்டங்கள் ஏற்கனவே இருந்ததை மேம்படுத்தி கொண்டுவரப்பட்டவை ஆகும். மின்சார மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வு மக்கள் மத்தியில் நிறையவே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார ஏற்ற இறக்கத்தால் டிவிகள் மற்றும் ஃபிரிட்ஜ்கள் வெடிக்கும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. நிலமற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் மற்றும் ஆன்லைன் பட்டாவில் ஊழல் நடப்பதை தடுக்கவே முடியாது. அதேபோல 10,000 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம், வெறும் ஒரு லட்சம் ரூபாய் மூலதனத்தோடு இயங்குவது எப்படி சாத்தியம்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல் நிலையங்களில் நடக்கும் மரணங்கள் மக்களிடையே காவல் துறை மீதான பயத்தை ஏற்படுத்திவிட்டன. இத்தகைய சூழலில் மாஃபியா கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது" என்றெல்லாம் கடுமையாக சாடியிருக்கிறார்.ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய்
தொகுதி மறுசீரமைப்பு மசோதா
திமுகவின் நகர்வுகள்
சிஸ்டத்தை வலுப்படுத்த வேண்டும்
மின்சாரம் & ஆன்லைன் பட்டா ஊழல்