இனி குடித்துவிட்டு லாரியை ஓட்டவே முடியாது! தூக்கம் வந்தாலும் ஒரு இன்ச் கூட நகராது! வாவ் முயற்சி!

  • சென்னை: இனி மது குடித்துவிட்டு லாரிகளை இயக்க முடியாத அளவுக்கு சென்னை ஐஐடியுடன் இணைந்து செயலியை உருவாக்கும் பணியில் நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தீவிரம் காட்டி வருகிறது.

    Advertisement

    நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை ஐஐடி உடன் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறினார்.

    Advertisement

    அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் லாரி தொழிலில் என்னென்ன நடக்கிறது என்பது குறித்தான முழு தகவல்களையும் திரட்ட உள்ளதாக கூறினார்.

    இதற்கான ஆய்வு பணியில் சென்னை ஐஐடி மிக தீவிரமாக நடத்தி வருகிறது என்றும் விரைவில் இந்த ஆய்வுப் பணிகள் முடிவுற்ற பின்னர் லாரி தொழில் குறித்தான முழுமையான விவரங்கள் தங்களுக்கு தெரிய வரும் என கூறினார்.

    இதனை அடுத்து அப்ளிகேஷன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்த அருள் லாரியில் சென்சாரும் கேமராவும் பொருத்தப்பட்டு ஓட்டுனர் மது அருந்தி லாரியை இயக்குகிறாரா? அல்லது தவறான மற்ற செயல்களில் ஈடுபடுகிறாரா? லாரி எங்கு நிற்கிறது? சரக்குகள் இறக்கப்பட்டதா அல்லது சரக்குகள் ஏற்றும் பகுதியில் லாரி உள்ளதா? என்பது குறித்தான முழு தகவல்களையும் அந்த செயலின் மூலம் லாரி உரிமையாளர்கள் கண்காணிக்க உள்ளதாக இதற்கான சிறப்பு செயலியை உருவாக்கி வருவதாகவும் சென்னை ஐஐடி இந்த பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    Advertisement

    இந்த செயலி மூலம் ஓட்டுநர்கள் மது அருந்தி இருந்தால் லாரியை இயக்க முடியாது, தூக்கம் வந்தாலும் லாரிகளை இயக்க முடியாது. இவ்வாறு புதிய புதிய சேவைகளை அந்த செயலி மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த அருள், லாரி ஓட்டுனர்களுக்கு ரேட்டிங் முறையை அமல்படுத்த உள்ளதாகவும் இந்த ரேட்டிங் மூலம் லாரி ஓட்டுனர்கள் தங்கள் பணியை சரியாக செய்யும் பட்சத்தில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

    அதேசமயம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் ஊதியம் குறைவாக கிடைக்கும் எனவும் தெரிவித்தார். ஊதியம் குறைவாக கிடைக்கும் போது ஓட்டுநர் தன்னை திருத்திக் கொண்டு ஊதிய உயர்வுக்கு பணி செய்ய இந்த செயலி உதவும் என தெரிவித்தார்.

    Advertisement

    மேலும் இந்தியாவில் விவசாயம் நடைபெற்று அறுவடைக்கு தயாராக உள்ள வேளாண் பொருட்களும், அதே போல் தொழிற்சாலைகள் எங்கு எங்கு உள்ளது, அங்கு அன்றாட என்ன பொருட்கள் ஏற்ற முடியும் என்பது குறித்து தகவல்களை திரட்டி சம்பந்தப்பட்ட இடத்திற்கு லாரிகளை வாடகைக்கு பணியமர்த்த இந்த செயலி உதவும் எனவும் தெரிவித்தார்.

    சென்னை ஐஐடி மூலம் லாரி தொழில் குறித்தான முழு தகவல்களையும் திரட்டி மத்திய, மாநில அரசிடம் வழங்கி லாரி தொழிலை மென்மேலும் வளர்த்தெடுக்க இந்த சங்கம் பாடுபடும் என தெரிவித்தார்.

    சென்னை ஐஐடி சோதனைக்காக நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத்தின் மூலம் 100 லாரிகளை சென்னை ஐஐடிக்கு அனுப்ப தயாராக உள்ளதாக தலைவர் அருள் கூறினார்.

    Advertisement

    தற்போது லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவதற்காக பெண்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து பெண் லாரிகளில் ஓட்டுனர்களாக பணியமர்த்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இதன் முதல் கட்டமாக பெண்களுக்கு பயிற்சி அளித்து பள்ளி வாகனங்களை இயக்க வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்ட அருள் இதற்கு மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டுமென தெரிவித்தார்.

    மேலும் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் வளாகத்தில் தண்ணீர் ஏடிஎம் மிஷின் நிறுவப்பட்டுள்ளதாகவும் தற்போதைக்கு நகர மக்கள் இலவசமாக தண்ணீர் பெற்று செல்லலாம் என்றும் வருங்காலத்தில் குறைந்த கட்டணத்தில் அதிக அளவில் தண்ணீர் கிடைக்கும் வகையில் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார்.

    English Summary

    Namakkal lorry owners are developing application to prevent drunken driving. The lorry cannot be operated even the driver has in sleep.