நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது

  • சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மரணம் மற்றும் குடும்பச் சொத்துப் பிரச்சனை குறித்து மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேசன் பிரத்யேக பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், பாரதிராஜாவின் உடன்பிறப்புகள் எல்லாரும் இன்று வந்து "அண்ணன் அப்படி, இப்படி" என்று சும்மா அழுது நாடகமாடுகிறார்கள். ஆனால் பாரதிராஜா உயிருக்குப் போராடிய போது அவரது தம்பியோ அல்லது மற்றவர்களோ அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பார்க்கவில்லையே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    பாரதிராஜாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற தனது 2 மகள்களுடன் சென்றிருந்த நந்தனாவை இருக்கையை விட்டு எழுந்திருக்க வைத்து, கையை முறுக்கி, திட்டி விரட்டிவிட்டதாகவும், இதை அருகில் சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது..

    Advertisement

    சத்தம் கேட்டு உடனே சென்ற நடிகை ராதிகா, ஜனனியை கையெடுத்து கும்பிட்டு சமாதானம் செய்தாராம்.. உறவுகளால் விரட்டப்பட்ட அவமானம் தாங்காமல் நந்தனாவின் 2 மகள்களும் கண்ணீர் விட்டு தேம்பி அழுததாகவும், அதற்கு மேல் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்கள் 3 பேரையும் சென்னைக்கு அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் வட்டமடித்தன. .

    2 முக்கிய காரணங்கள்

    இந்நிலையில், இதுகுறித்து சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் வெங்கடேசன், "இயக்குநர் பாரதிராஜா இன்னும் சில ஆண்டுகள், அதாவது 90 முதல் 95 வயது வரை நன்றாக ஆரோக்கியமாக வாழ வேண்டியவர். அவருடைய இந்தத் திடீர் மரணத்திற்குப் பின்னால் 2 மிக முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

    Advertisement

    முதலாவது காரணம், அவருடைய மகன் மனோஜின் திடீர் இழப்பு. இரண்டாவது காரணம், மனோஜ் உயிரோடு இருந்த காலத்திலேயே அவருக்கு உரிய சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்க முடியாமல் போனதுதான். மகன் மறைந்த பிறகாவது, அவனுடைய மனைவிக்கும் பேத்திகளுக்கும் அந்த சொத்துக்களைச் சரியான நேரத்தில் பிரித்துக் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம், குற்ற உணர்ச்சி மற்றும் வேதனைதான் பாரதிராஜாவை மனரீதியாகப் பாதித்து, படுக்கையில் வீழ்த்தியது. இறுதியில் அதுவே அவருடைய மரணத்திற்கும் வழிவகுத்தது.

    நந்தனா காதல் திருமணம்

    இந்த ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கும் பின்னணியில் இருப்பது, மனோஜின் திருமணத்தின் மீது பாரதிராஜாவின் மகள் ஜனனிக்கு இருந்த கோபமும் வன்மமும்தான்.

    Advertisement

    மனோஜ், நடிகை நந்தனாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டதை ஜனனியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை மனோஜ், ஜனனி ஆசைப்பட்டபடி ஒரு பெரிய கோடீஸ்வரக் குடும்பத்தில் திருமணம் செய்திருந்தால், ஜனனி இந்த அளவிற்குப் பிடிவாதம் பிடித்திருக்க மாட்டார்.

    இந்த இடத்தில் நான் ஜனனியை நோக்கி ஒன்று கேட்கிறேன், உங்களுடைய அண்ணன் ஆசைப்பட்டு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் உங்களுக்கு ஏன் இந்தத் தேவையற்ற கோபம்? நீங்கள் மலேசியாவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாவதற்கு, இதே அண்ணன் மனோஜும், அண்ணி நந்தனாவும் எவ்வளவு உதவிகளைச் செய்தார்கள்? அதை நீங்கள் எப்படி இவ்வளவு எளிதாக மறந்துவிட்டீர்கள்?

    Advertisement

    பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த போது, சினிமாவை சேர்ந்த ஒரு பிரபல தயாரிப்பாளரும், ஒரு முக்கிய அரசியல் கட்சித் தலைவரும் ஜனனி தரப்பிடம் ஒரு சுமுகமான, நியாயமான கோரிக்கையை வைத்தனர். பாரதிராஜாவை சுற்றியுள்ள ஒட்டுமொத்த சர்க்கிளுமே நந்தனாவிற்கு சொத்து போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தபோது, இவர்கள் இருவரும் நடுநிலையாகத் தலையிட்டு பேசினார்கள்.

    தலா 25 கோடி ரூபாய் டெபாசிட்

    பாரதிராஜாவிற்கு இவ்வளவு சொத்துக்கள் இருக்கிறதே, அதில் ஒரு 50 கோடி ரூபாயை மனோஜின் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தலா 25 கோடி ரூபாய் வீதம் பிக்ஸட் டெபாசிட் செய்து விடுங்கள். அவர்கள் அதை எடுத்து வீணாக்க முடியாதபடி சட்டப்படி லாக் செய்து வையுங்கள். அந்தப் பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு, தங்களுக்குத் தேவையானதை, அவர்கள் ஒருவேளை இயக்குநராக ஆசைப்பட்டால் கூட, அதைச் செய்து கொள்ள இந்தத் தொகை உதவியாக இருக்கும்' என்று மிகவும் நியாயமாகக் கேட்டனர்.

    Advertisement

    சொத்துக்காக அவமானம்?

    ஆனால், மனோஜின் குடும்பத்திற்கு எதையுமே கொடுக்கக் கூடாது என்பதில் ஜனனி தரப்பு மிக உறுதியாக இருந்து, அந்தக் கோரிக்கையை நிராகரித்ததோடு நந்தனாவின் குடும்பத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்கிறார்கள்.

    ஒருமுறை நந்தனாவும் குழந்தைகளும் நீலாங்கரை வீட்டிற்கு வந்தபோது கூட,"'இவர்கள் எதற்காக இங்கேயிருக்கிறார்கள், எதற்கு வருகிறார்கள்?" என்று கேட்டார்களாம்.. சொத்துக்காக ஒரு குடும்பம் இந்த அளவிற்கு இரக்கமற்று நடந்துகொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நந்தனா - ஜனனி பிரச்சனை?

    பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதிகா, அந்த நன்றி விசுவாசத்திற்காகச் சாவு வீட்டில் அவரது உடலின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். சாவு வீட்டில் நந்தனாவிற்கும் அவரது பெண் குழந்தைகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு ராதிகா கைகளை கூப்பி அழுது, சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

    சொந்த மகளான ஜனனி மலேசியாவிலிருந்து வந்து தன் அப்பாவின் மறைவிற்காக அழுது வருத்தப்பட்டதை விட, அண்ணி நந்தனாவின் கையைப் பிடித்து இழுத்து சேரிலிருந்து தூக்கி போடும் வேலையைத்தான் செய்துள்ளார். அதன் பிறகு அங்கே பிரச்சனை அதிகமாகிவிடும் என்பதால், நந்தனாவை அங்கிருந்து சென்னைக்கே திருப்பி அனுப்பிவிட்டனர். தன் தாத்தாவின் உடலைப் பார்க்க முடியாமல் அந்தப் பேத்திகள் கத்தி கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது

    தம்பியாவது அவரை பார்த்திருக்கலாமே

    பாரதிராஜாவின் உடன்பிறப்புகள் எல்லாரும் இன்று வந்து "அண்ணன் அப்படி, இப்படி" என்று சும்மா அழுது நாடகமாடுகிறார்கள். ஆனால் பாரதிராஜா உயிருக்குப் போராடிய போது அவரது தம்பியோ அல்லது மற்றவர்களோ அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பார்க்கவில்லையே..

    பெரிய நீலாங்கரை வீட்டில் அவரை ஏன் தனியாக விட்டுவிட்டார்கள்? கடைசி நேரத்தில் அவர் என்ன நினைத்து வேதனைப்பட்டார், என்ன சொல்ல நினைத்தார் என்று யாருக்குமே தெரியாமல் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Nandhana insulted at Bharathiraja’s home due to Property clash? actress Radhika begs Janani