சென்னை: மூத்த தலைவர் நாஞ்சில் சம்பத் குறித்து மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் தலைவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை மற்றும் பொதுமேடை விவாதங்களில் பேச்சாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் குறித்து ஊடகவியலாளர் அந்தணன் விரிவான கருத்துக்களை கூறும்போது, நாஞ்சில் சம்பத் பேசிய கருத்து குறித்தும் பேசியிருக்கிறார்.
Valai pechu Anthanan சேனலில் பேசியிருக்கும் அந்தணன், "சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவரது பெயரை குறிப்பிட்டு பேசப்பட்டது.. உடனே திமுகவினர் எழுந்து கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.. உடனே முதல்வர் மு.க. விஜய் உடனடியாக எழுந்து மன்னிப்பு கேட்டிருந்தார்.. கருணாநிதி என்று சபையில் உறுப்பினர் சொன்னதற்கே மன்னிப்பு கேட்கிறார் விஜய்.. இது அவரது உயர்வான அரசியல் பண்பைக் காட்டுகிறது..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, கலைஞர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் போன்ற ஆளுமைமிக்க தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் அளிக்கப்படும் அன்பையும் மரியாதையையும் எக்காலத்திலும் யாரும் குறைக்கக் கூடாது.. நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்திகளைப போன்றவர்கள் நிறைந்து இருந்தனர்.. அத்தகைய நபர்களுக்கு இப்போது ஓரளவுக்கு "பூச்சி மருந்து" அடித்து அவை குறைக்கப்பட்டுள்ளது.. ஆனாலும் ஆங்காங்கே சிவாஜி கிருஷ்ணமூர்த்திகள் பெரிய அளவில் பொதுமேடைகளில் ஒளிர்வதில்லை.. அவரை பிடிக்காதவர்கள் கூட கலைஞர் என்று கூப்பிட்டு பழகியிருக்கும் சூழலில், சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் அப்படி பேசியதும் முதல்வர் உடனடியாக எழுந்து பண்போடு மன்னிப்பு கேட்டுக் கொண்ட விதமானது உண்மையிலேயே வியப்பை தந்துவிட்டது,. ஆனால், சிறந்த இலக்கியவாதியும் பேச்சாளருமான நாஞ்சில் பட்டிமன்றங்கள் மற்றும் மேடை விவாதங்களில் மக்களை ஈர்க்கும் திறன் கொண்ட அவர், சமீபத்தில் நடந்த ஊடக நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது நாஞ்சில் சம்பத் திமுகவினரைக் குறித்தும் அவர்களின் குடும்பத்தினரை குறித்தும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இப்படி பேசியதற்கு நாக்கு அவருக்கு கூசலயா? தமிழ் மூத்த இலக்கியவாதி இப்படி பேசலாமா? இத்தகைய முறையற்ற பேச்சுகளால் மேடையில் நாற்காலிகள் வீசப்பட்டு வன்முறை வெடித்தது.. திமுகவினர் மேடைவரை வந்துவிட்டார்கள்.. தமிழறிஞராகப் போற்றப்படுபவர்கள் பொதுவெளியில் எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இதுபோன்றவர்கள் செய்யும் ஒவ்வொரு கெட்ட செயலும் முதலமைச்சர் தலையில்தான் விழும். அதேபோல விவாத மேடைகளில் நடக்கும் கலவரங்களை மீடியாக்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காகவே இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.. சில சமயம், இதுபோன்ற விவாத நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்களிடம் வேண்டுமென்றே இடக்குமுடக்கமாகப் பேசுமாறு ஊடகங்கள் சொல்கின்றனவா என்றும் தெரியவில்லை.. சமீபத்தில் தவெகவை சேர்ந்த ஒருவர் மைக்கைப் பிடித்து, கூகுளில் தமிழ்நாட்டின் டுபாக்கூர் அரசியல்வாதி யார் என்று தேடினால் சீமான் பெயர் வருவதாக சொல்கிறார்.. உடனே மேடையில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் இதனை எதிர்த்தார்கள். பொது மேடைகளில் இதுபோன்ற கூகுள் தேடல் முடிவுகளைப் போன்ற தேவையற்ற மற்றும் தரக்குறைவான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்... நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி மற்றும் கல்யாணசுந்தரம் போன்றோர் அதே மேடையில் உட்கார்ந்திருந்தபோது, தவெக பிரமுகர் அப்படிப்பட்ட கருத்தை வலியுறுத்தியது தேவையற்றது.. இதுபோன்ற பொது மேடைகளில் கட்சிப் பிரமுகர்களை வைத்துக் கொண்டே இதுபோன்ற கருத்துக்களை பேசும்போது அங்கு கண்டிப்பாகக் கலவரம் ஏற்படும் என்பதால், இவற்றைத் தவிர்க்க வேண்டும். சட்டமன்றத்தில் முதல்வர் எளிய நாகரிகத்தை கடைப்பிடித்து தனது கட்சியினருக்கு முன்னுதாரணமாக விளங்குவது போல, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும்.. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் ஓரளவுக்கு நாகரிகத்தைக் கடைப்பிடிக்கும் நபர்கள்.. அதுபோல, தவெகவில் அங்கம் வகிப்பவர்களும் நாஞ்சில் சம்பத் போன்ற மூத்த தலைவர்களும் பொதுவெளியில் பேசும்போது கண்ணியத்தைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.. ஏனென்றால் தமிழகத்தில் நல்லாட்சி மலர முயலும் தலைவர்களை இதுபோன்ற செயல்கள் பின்னோக்கி இழுத்துவிடக் கூடாது..!!அரசியல் நாகரீகம்
கருணாநிதி பெயருக்கு மன்னிப்பு கேட்ட விஜய்
மீடியாக்களின் டிஆர்பி ரேட்டிங்
சீமான் பற்றிய கருத்து
பின்னோக்கி இழுத்துவிடக் கூடாது