பேசிட்டிருக்கும்போதே உயிர் போகணும்.. இன்னோவா காரை அப்பவே தந்துட்டேன்: குமுறிய நாஞ்சில் சம்பத்

  • சென்னை: என்னைப்போல எவரையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட பேச்சாளர் தி.மு.க-வில் யாரும் இல்லை. முன்பு திமுக சொற்பொழிவாளர்களின் சொர்க்கமாக இருந்த இயக்கம், இன்று வாடகை பேச்சாளர்களை வைத்துக்கொண்டு இயங்கும் நிலைக்கு வந்துவிட்டது. அந்த இயக்கத்தில் யார் பேசுவது என்றே தெரியாத நிலை இருக்கிறது.. திமுக தனது உண்மையான இருப்பைத் தொலைத்துவிட்டு அம்மணமாக நிற்கிறது" என்று நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Thamizh Alai Seithigal என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள நாஞ்சில் சம்ப, "ராஜீவ் காந்தி அந்தக் கூட்டத்திற்கு அடியாட்களைக் கூட்டிக்கொண்டு வந்தார்.. தவெக சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, திமுக தரப்பை சேர்ந்தவர்களும் அடியாட்களும் மேடையை நோக்கி காட்டுக்கத்தலாக கூச்சலிட்டனர்.

    Advertisement

    தவெக தம்பிகள்

    "இன்னோவா சம்பத்" என்று கத்தி கேலி "இப்படி கூச்சலிட்டால் இங்கே எப்படிப் பேசுவது?" என்று நான் மேடையில் எழுந்து ரங்கராஜ் பாண்டேவிடம் கேட்டேன். ஆனால், அந்த சூழலில் அவர் அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார். அதன் பிறகு, நான் மீண்டும் மைக் அருகில் பேச வந்தபோது, அங்கிருந்தவர்கள் என்னை "இன்னோவா சம்பத்" என்று கத்தி கேலி செய்தனர்.

    மனிதன் ஒரு பலவீனமான ஜந்து என்பதால், நான் உணர்ச்சிவசப்பட மாட்டேன், கோபப்பட மாட்டேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். திருவள்ளுவர் சொன்னது போல கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதில் நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன். ஆனாலும், எனது பேச்சிற்கு பிறகு, மேடையை நோக்கி நாற்காலிகளை தூக்கி வீசித் தாக்குதல் நடத்த வந்தனர்.

    Advertisement

    அப்போது தவெக தம்பிகள் என்னைச் சூழ்ந்து நின்று காப்பாற்றி, பின்னால் இருந்த அறையில் என்னை அமர வைத்தனர். அடியாட்கள் சென்ற பிறகு, நான் மீண்டும் பேசி முடித்தேன்.

    "இன்னோவா சம்பத்"

    என்னை "இன்னோவா சம்பத்" என்று விமர்சிப்பது எனக்கு மிகுந்த வலியையும் வருத்தத்தையும் தந்தது. அந்த இன்னோவா கார், நான் அதிமுகவில் இருந்தபோது ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது... அது சொந்த உபயோகத்திற்கு கிடையாது, கட்சியின் பணிக்காக, அதாவது கட்சியின் பிரச்சார விங்கில் இருந்த கார் மட்டுமே ஆகும். நான் அதிமுகவை விட்டு விலகும்போது அந்தக் காரை ஓபிஎஸ்ஸிடம் முறையாக ஒப்படைத்துவிட்டுத்தான் வந்தேன்.

    Advertisement

    "இன்னோவா சம்பத்" என்று என்னை விமர்சித்ததற்குப் பிறகு, நான் மேடையில் பேசும்போது சில வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அதனால் யாருக்காவது வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    நான் சர்ச்சையில் சிக்குவதை ஒருபோதும் விரும்பவில்லை.. நான் சார்ந்திருக்கிற தவெக தலைவரும் இதை விரும்ப மாட்டார். எனவே, ஒவ்வொரு அடியையும் நான் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறேன்.

    பேசும்போதே உயிர் துறக்கணும்

    திமுகவினருக்கு விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லை. ஜனநாயக அடிப்படை அவர்களுக்கு தெரியாததால், அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஒரு இன்னோவா காருக்கு ஆசைப்படக்கூடியவரா சம்பத்? எனக்கு அத்தகைய எந்த ஆசையும் கிடையாது.

    Advertisement

    நான் உயிரோடு இருக்கும் வரை பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆசையைத் தவிர, வேறு எந்த ஆசையும் எனக்கு இல்லை. பொள்ளாச்சி மகாலிங்கம் மற்றும் வாரியார் சுவாமிகள் போன்ற பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே உயிர் துறந்தது போல, தானும் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே உயிர் போக வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆகும். ஆனால், காலம் எனக்கு அந்த வாய்ப்பைத் தருமா என்பது எனக்குத் தெரியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Nanjil Sampath Says He Wants to Die While Speaking.. “I Returned the Innova Car Long Ago”